கோடை மழை உழவு

 

 

கோடை மழை உழவு

கோடை மழை உழவு

தமிழகத்தில் கோடை மழை உழவு செய்ய பரவலாக எல்லா பகுதிகளிலும் கிடைத்து உள்ளது. இந்த மழை அளவு கோடைகாலத்தில் செய்யும் கோடை உழவுக்கு போதுமானதும் ஆகும் .அனைவரும் கோடை உழவு செய்து குறிப்பிட்ட அளவில் இயற்கையாக நிலத்தை வளப்படுத்தும் வேலைகளை செய்யலாம் .கோடை உழவின் மூலம் படைப்புழுவின் கூடுகள் , புழுக்கள் அழைக்க முடியும் .இதனால் நோய் மற்றும் படைப்புழுவின் தாக்குதல் மிகவும் குறையும் .

அதி குறிப்பிட்டு விவசாயம் செய்ய நிலம் தயார் செய்வதற்கு பசுந்தாள் உரப்பயிர்கள் நல்ல விதமான முறையில் காய் கொடுக்க கூடியவை . அதில் ஒரு ஏக்கர் நிலத்திற்கு தட்டைப்பயறு, கொழுஞ்சி, சணப்பை ஆகியவற்றை ஒரு எக்டேருக்கு 12 – 15 கிலோ என்ற அளவில் பயிரிட்டு மண் வளம் பெற செய்யலாம் .

இவ்வாறு செய்வதன் மூலம் கோடை காலத்தில் கிடைத்த மழையின் கிடைத்த மண்ணின் ஈரத்தன்மையை பாதுகாக்கவும் முடியும் . மேலும் தேவையற்ற முறையில் வளரும் களைகளையும் கட்டுப்படுத்தமுடியும் .

விவசாயம் செய்யம் நிலத்தில் பசுந்தாள் உரப்பயிர் செய்து மடக்கி உழுவதன் மூலம் , நிலத்திற்கு தேவையா தழைச்சத்து சேர்ந்து மண் நல்ல வளம் பெற்று நுண்ணூட்டங்கள் பெறுகிறது .

த.விவேகானந்தன்,
வேளாண் துணை இயக்குனர்
நீர் மேலாண்மை பயிற்சி நிலையம்,
மதுரை
தொடர்புக்கு 94439 90964.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline