விவசாயம் பற்றிய கட்டுரை
இயற்கை வேளாண்மை பற்றிய விவசாய கட்டுரைகளை ஒரு தொகுப்பாக தொகுத்து PDF வடிவில் கொடுக்கவேண்டும் அல்லது அனைத்தையும் தொகுத்து ஒரே நூல் வடிவில் கொடுக்கவேண்டும் என்று பலர் கேட்டு வருகின்றனர் . . விரைவில் நமது அனைத்து விவசாயம் சார்ந்த கட்டுரைகளை தனி தனியாக PDF வடிவில் சேமித்து கொள்ளும் வசதியை கொடுக்க உள்ளேன்.
மேலும் பலர் இயற்கை விவசாயம் பற்றிய தமிழ் கட்டுரைகளை தொகுத்து , அது பற்றிய விவரங்கள் கேட்டும் உள்ளனர்.இங்கு நாம் பகிர்ந்து உள்ள / தொகுத்து உள்ள அனைத்தும் விவசாயம் தகவல்கள் தமிழில் மட்டுமே உள்ளது .
மேலும் இந்த பதிவில் நான் சில படிக்கவேண்டிய நூல்களின் தொகுப்பை கொடுத்து விடுகிறேன். உங்களின் யாரும் நல்ல , நிச்சயம் படிக்கவேண்டிய விவசாயம் சார்ந்த புத்தகங்களின் தலைப்புல்கள் இருப்பின் பின்னுடத்தில் பகிர்ந்து கொள்ளவும் .
விவசாயம் சார்ந்த புத்தகங்கள்
ஒற்றை வைக்கோல் புரட்சி – மசானபுஃபுகோகா
“ஜப்பான் நாட்டில் பிறந்த ஒரு மகான்.சொந்த அனுபவங்களும் அவரின் பார்வையும் .படித்த பின்பு சொல்ல முடியாத அளவு மன ஓட்டங்கள்.இதனை படித்து அதிகம் பேர் இயற்கை விவசாயம் மேல் காதலும் ,பெரம்பும் கொண்டு இயற்கை முறையில் விவசாயம் முயன்றும் ,செய்தும் வருவது காண கிடைக்கும் விடயம். இந்த புத்தகத்தை பல முறை படித்தாலும் அலுக்காத ஒன்று .”
புதிதாய் விவசாயம் செய்ய வருபவர்கள் “இயற்கை வேளாண்மை” என்பதற்கு, இயற்கை நமது வேளாண்மையைக் கவனித்துக் கொள்ளும், நாம் விதை விதைத்து விட்டு சற்றுத் தள்ளி நன்று பயிர் வளர்ச்சியை வேடிக்கை பார்க்கலாம் என்று எண்ணி கொள்வர்களுக்கு ,மசானபுஃபுகோகா அவர்கள் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியதும் மிக மிக பெருமளவில் உள்ளது என்பதைஇந்த நூலில் மூலம் கற்றுக் கொடுப்பார்.
இயற்கை வேளாண்மை என்பதை மிக சரியாகக் கூற வேண்டுமானால், கற்காலத்தில் நாம் வேட்டையாடி சேகரித்த காலம் ஒன்றுதான் இயற்கை வேளாண்மைக் காலம். கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் தான் மனித இனம் பயிர்களை வளர்க்கத் துவங்கியதும், பல வகையான கலாச்சாரக் கண்டு பிடிப்புகழும் நடந்தது . அதனால் அதற்கு அறிவும் தொடர்ச்சியான முயற்சியும் தேவைப்படுகிறது. ஃபுகோகாவின் வேளாண் முறையில் உள்ள முக்கியமான வேறுபாடு என்னவென்றால், அது நாம் இயற்கையோடு ஒத்துழைப்பதில் இருக்கிறது. இயற்கையை ஆக்கிரமித்து கொண்டு அதை மேம்படுத்துவதில் அல்ல.
இயற்கை வழியில் வேளாண்மை – மசானபுஃபுகோகா
இந்தப் புத்தகமானது விவசாயம் பற்றிய கட்டுரை யின் தொகுப்பு மற்றும் ஒரு தனிநபரின் ஐம்பது வருடங்களாக இயற்கை வழியில் இயற்க்கையைத் தேடி அலைந்த ஒரு ஜப்பான் நாட்டு விவசாயி மசானபுஃபுகோகாவின் தரிசுநில மேம்பாட்டு முறையும், இயற்கையோடு இணைத்த வேளாண்முறையும் உலக அளவில் மிகவும் புகழ் பெற்றது. இந்த வேளாண் முறையில் உழவு, களைக்கொல்லிகள் இல்லாமல் ஆதி மனிதனால் முதலில் பயிர் தொழில் பயிர்வளர்ப்பு முறையை ஒட்டி அமைந்த இயற்கை விவசாய முறையை இவர் வலியுறுத்தினார்.
இவரின் வேளாண்மை முறையை ‘ இயல்முறை வேளாண்மை ‘ அல்லது ‘ எதுவும் செய்யாத வேளாண்மை ‘ என்றும் அழைக்கின்றனர். ஃபுகோகாவின் இந்த இயற்கை வேளாண்மை முறை இப்பொழுது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் அதிகம் கடைபிடிக்கப்படும் இயற்கை வேளாண் முறைகளுக்கு இணையானது.
ஃபுகோகா தனது இயற்கை வேளாண்மை முறையை மேற்கத்திய வேளாண்முறைகளிலிருந்து மேம்படுத்தி மண்வளம் குன்றாமல், குறைவான உடலுழைப்பு உடன் நல்ல விளைச்சலைத் தரக்கூடியது என்று நிருபித்து உள்ளார். ஃபுகோகா தான் பயிலும் உழவு முறையை ‘ இயற்கை உழவு முறை ‘ என்று அழைக்கலானார். அவரது செயல்பாடுகள் அதிகம் ஜப்பான் நாட்டிற்கு பொருந்துவதாக இருப்பினும், அவரது விவசாய முறைகள் பொதுவான உள்ளார்ந்த கொள்கைகள் கொண்டு உள்ளது. அதனை கொண்டு பலஉலக நாடுகள் பலவற்றில் வெற்றிகரமாக செயல்பாட்டிற்கு கொண்டு வந்து வெற்றி கண்டு உள்ளன . ஃபுகோகாவின் முறைகளில் இயற்கைச்சூழல் கூடுமான வரை பேணப்படுகின்றது.
விளைச்சலுக்கான , பயிர்களுக்கான இயற்கை முறையில் சரியான சூழல் அமைத்துக்கொடுக்கப்படும்போது விதைகள் உழவு செய்யாமல் முளைக்க வைக்கப்படுகின்றன. மேலும் இதில் அதிக செலவு செலவு பிடிக்கும் செயற்கை உரங்கள் இல்லாமல், எந்தவிதமான உழவு இயந்திரத்தின் தேவை இல்லாமல் திக விளைச்சல் பெற முடிகிறது .இந்த இயற்கை விவசாய/வேளாண் முறையின் மூலம் சிறிய அளவிலான நிலம் வைத்திருக்கும் குறுவிவசாயிகளுக்கும் கூட கை கொடுத்து கொண்டு உள்ளது .
Good
Hi v good decesision
நான் கல்லூரி மாணவன் …எனக்கு விவசாயத்தில் ஆரவம் உள்ளது ஆனால் எந்த காலத்தில்(session) என்ன பயிர் இடுவது என்று தெரியவில்லை …எனக்கு உங்கள் உதவி தேவை படுகிறது …எனக்கு காலத்திற்கேற்ப பயிர் செய்யும் முறை மற்றும் அதன் பெயர்களை (பயிர்) சொல்லுங்கள் …..நண்பர்களே …மிகவும் தாழ்மையுடன் கேட்கிறேன் ….உதவுங்கள்
என் பெயர் ஜான்சிராணி நான் மிளகாய் பயிர் விதைக்க வேண்டும் அதற்கு நான் என்ன செய்வது எந்த மாதத்தில் பயிர்டுவது