கொங்குத் தமிழ்

கொங்குத் தமிழ்


கொங்குத் தமிழ் என்பது கொங்கு நாட்டு மக்கள் பேசும் தமிழ் மொழி ஆகும். கொங்கு என்ற சொல்லுக்குத் தேன், பூந்தாது என்று பொருள். ஆயினும் அதற்கும் இந்த நாட்டின் பெயருக்கும் தொடர்பிருப்பதாக இன்னும் மொழியியல்படிச் சான்றுகள் இல்லை.

10592866_10201520060923029_9079705682229065758_n
தமிழின் சிறப்பு ‘ழ’ என்பது போல் கொங்குத் தமிழின் சிறப்பு ‘ற’ மற்றும் ‘ங்’ என்பனவாகும். என்னுடைய, உன்னுடைய என்பதை என்ற, உன்ற என்றும், என்னடா என்பதை என்றா என்பார்கள். சாப்பிட்டுவிட்டு, குளித்துவிட்டு என்பனவற்றை சாப்டுபோட்டு, “தண்ணிவார்த்துகுட்டு”, ‘தண்ணிஊத்திக்கிட்டு’ என்று கூறுவார்கள்.
மரியாதை கொடுத்துப் பேசும் தமிழ் கொங்குத் தமிழ். ஏனுங்கோ, சொல்லுங்கோ, வாங்கோ, போங்கோ என்று எதிலும் ‘ங்கோ’ போட்டு மரியாதையாகப் பேசுவார்கள். பெரியவர்களிடம் பேசும் போது ‘ங்கோ’ என்பதற்கு பதில் ‘ங்’ போட்டும் பேசுவார்கள். சொல்லுங், வாங், போங், சரிங், இல்லீங் என்று ‘கோ’ வை சொல்லாமல் முழுங்கி விடுவார்கள்.


கொங்குப் பகுதியில் புழங்கும் சில சொற்கள் (அகரவரிசையில்)
* அக்கட்ட, அக்கட்டு. அக்கட்டாலே – அந்த இடம், அந்த இடத்திலே. “நீ அக்கட்டாலே போய் உட்காரு”
* அங்கராக்கு – சட்டை
* அட்டாரி, அட்டாலி – பரண்
* அப்பச்சி , அப்புச்சி- தாய்வழித் தாத்தா
* அப்பு – அறை. (அவள ஓங்கி ஒரு அப்பு அப்புடா, செவுனி திலும்பரப்பல)
* அம்மாயி – அம்மாவின் அம்மா
* அப்பத்தாள் – அப்பாவின் அம்மா
* ஆம்பாடு – காலும் இடுப்பும் சேரும் மடிப்பான இடம் (ஆம்பாட்டிலே தேய்த்துக் குளி)
* இக்கட்டு – இந்த இடம்
* இட்டாரி (இட்டேறி) – தடம் (வயல்களினிடையே செல்லும் வரப்புப்பாதை, வண்டிப்பாதை)
* இண்டம் பிடித்தவன் – கஞ்சன்
* உண்டி – (sample) = உண்ணும் பதம்? – தர்பூசணியில் உண்டிபோட்டுக்கொடு; எப்படி இருக்கிறதென்று பார்க்கலாம்
* ஊக்காலி (?ஊர்க்காலி)- பெரியவர்கள் சொல் மதியாமல் தான்தோன்றித்தனமாக சுற்றுபவர்களை ஊக்காலி என்பர். ( ரவுடி )
* எச்சு – அதிகம்.
* எகத்தாளம் – நக்கல், பரிகாசம்
* ஏகமாக – மிகுதியாக
* ஒட்டுக்கா – ஒரேயடியாக, இணைந்து (இரண்டு பேரும் ஒட்டுக்காகப் போயிட்டு வாருங்கள் – இருவரும் இணைந்து சென்று வாருங்கள்)
* ஒடக்கான் – ஓணான்
* ஒப்பிட்டு – போளி
* ஒளப்பிரி – உளறு “இவன் என்ன இப்படி ஒளப்பிரிக்கிறான்”
* ஒறம்பற – உறவினர் (உறவின்மு்றை) – விருந்தினர்
* ஓரியாட்டம் – சண்டை: அவிய பங்காளிகளுக்குள்ள எப்பவுமே ஓரியாட்டம்தான்.
* கட்டுத்தரை – மாட்டுத் தொழுவம்
* கட்டிச்சோற்று விருந்து – கட்டிச்சாத விருந்து , வளைகாப்பு
* கரடு – சிறு குன்று
* கண்ணாலம் – கல்யாணம் \ திருமணம்
* கூம்பு – கார்த்திகை தீபம் ( கூம்பு அவிகிறதுக்குள்ளே அந்தக் காரியத்தைப் பண்ணிடு )
* குரல்வளை \ தொண்டை
* கோடு – கடைசி ( கோட்டுக்கடை – கடைசிக்கடை, அந்த கோட்டில பாரு – அந்த கடைசில பாரு)
* சாடை பேசுறான் – மறைமுகமாக தாக்கிப் பேசுகிறான்
* சிலுவாடு – சிறு சேமிப்பு
* சீரழி – நிலைகுலைதல் (அங்கிங்கே அலைந்து சீரழியவேண்டாம்)
* சீராட்டு – கோபம். (கட்டிக் கொடுத்து மூணுமாசம் கூட ஆகலை. அதுக்குள்ளே பிள்ளை சீராடிட்டு வந்துவிட்டது)
* சுல்லான் (சுள்ளான்?) – கொசு
* செம்புலிகுட்டி – செம்மறியாட்டுக்குட்டி
* சோங்கு – சோலைபோலும் மரஞ்செடித்தொகுதி
* தாரை – பாதை
* தொண்டுப்பட்டி – மாடு/ஆடு அடைக்கும் இடம், தொழுவம் – ஆட்டைத் தொண்டுப்பட்டியிலே அடை
* துழாவு – தேடு
* நலுங்கு – உடல் நலம் குன்றிய ( குழந்தைகள் உடல் நலம் குன்றி இருந்தால் மட்டுமே நலுங்கு என்ற சொல்லை புழங்குவார்கள், பெரியவர்களுக்கு இச்சொல்லை பயன் படுத்த மாட்டார்கள் – அவங்க குழந்தை நலுங்கிகிச்சாம் )
* நாயம் – பேச்சு ( அவன் பேச்சு யாருக்கு வேணும் – அவன் நாயம் யாருக்கு வேணும், அங்க என்னடா பேச்சு – அங்க என்னடா நாயம் )
* நோக்காடு – நோய், வலி: அவனுக்கென்ன நோக்காடோ தெரியலை. இன்றைக்கு வரக் காணோம்.
* நோம்பி – (நோன்பு) திருவிழா
* பவுதியாயி நோம்பி – பகவதி அம்மன் திருவிழா
* படு – குளம்போன்ற ஆழமில்லாத நீர்நிலை
* பழமை – பேச்சு ( அங்க என்ன பேச்சு – அங்க என்ன பழமை )
* பாலி – குளத்தை விடச் சிறிய நீர்நிலை.
* பிரி – பெருகு, கொழு (“பெண்கள் மாசமாக இருக்கும்பொழுது வயிறு பிரியும்”)
* புண்ணியாசனை – (< வடமொழி: புண்யாகவசனம்) புதுமனை புகுவிழா
* பெருக்கான் – பெருச்சாளி
* பொக்கென்று – வருத்தமாக (மிட்டாய் தரேனென்று சொல்லிட்டுத் தராமல் இருந்தால் குழந்தை பொக்கென்று போயிடும்)
* பொட்டாட்ட – அமைதியாக இருத்தல்
* பொடக்காலி – புழக்கடை
* பொடனி, பொடனை – (புடனி, பிடனி, பிடரி) பின்கழுத்து
* பொறந்தவன் – உடன் பிறந்த சகோதரர்
* பொறந்தவள் – உடன் பிறந்த சகோதரரி
* மச்சாண்டார் – கணவனின் அண்ணன்
* மழைக்காயிதம் – பாலிதீன் காகிதம்
* மலங்காடு – மலைக்காடு
* முக்கு – முனை, மூலை, வளைவு
* வெகு – அதிக
* வெள்ளாமை – வேளாண்மை \ விவசாயம்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.