கணினி முன்பு அதிக நேரம் இருப்பவரா?

இன்று எந்த வேலையாக இருப்பினும் கணினி முன்பு அதிக நேரம் செலவிட வேண்டி இருக்கிறது. இதனால் கணினியின் பயன்பாடுகள் அதிகம் கொண்டவர்கள் உடல் நலத்திலும் அக்கறை எடுத்து கொள்வது மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது.

கம்ப்யூட்டர் முன்பு அதிகம் வேலை செய்பவர்கள், உடல்நலத்தில் அக்கறை எடுத்து கொள்வதற்கான சில டிப்ஸ்கள் இங்கே பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

  • முதலில் அதிக நேரம் கம்ப்யூட்டரை பார்ப்பவர்கள் கண்கள் மேல் கவனம் செலுத்த வேண்டும். மிக பக்கத்தில் இருந்து கம்ப்யூட்டர் திரையில் வெளிச்சத்தினை பார்ப்பதால், கண்கள் பாதிப்படைய நிறைய வாய்ப்பிருக்கிறது.
  • இதனால் 15 நிமிடத்திற்கு ஒருமுறை கண்களுக்கு ஒய்வு கொடுப்பது நல்லது. அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இது சாத்தியப்படாது.
  • இதற்கும் வழி இருக்கிறது. உள்ளங்கையை கண்கள் மேல் வைத்து ஒரு இரண்டு நிமிடம் ஒய்வு கொடுக்கலாம். இது ஓரளவு கண்களை பாதிப்பில் இருந்து காப்பாற்றும்.
  • தொடர்ந்து கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்யும் நபர்கள், பத்து நிமிடத்திற்கொருமுறை கைகளையும், உடலையும் நீட்டி மடக்கி சிறிய உடற்பயிற்சி செய்து கொள்வது மிக நல்லது.
  • கணினியின் முன் அமர்ந்து டைப் செய்கையில் உடலை நேர்கோட்டில் வைத்திருப்பது மிக அவசியமான ஒன்று. இதனால் முதுகுத்தண்டு நேராகா இருக்கும். இது போல் செய்வதால் உடல் வலி அதிகம் வருவதை குறைக்கலாம்.
  • பாதங்களை தரை மீது சமமாக வைத்திருப்பது இன்னும் சிறந்தது. உடலின் அனைத்து பலமும் பாதத்தின் மேல் இருப்பதால், பாதத்தினை சமநிலையில் வைத்து கொள்ள வேண்டும்.
  • டைப் செய்யும் போது முழங்கைகள், இடையின் பக்கத்தில் வைத்திருப்பது கைகளுக்கு சிறப்பாக சப்போர்ட் கொடுக்கும். இதனால் சரியான முறையில் அமர்ந்து டைப் செய்ய முடியும். அதோடு தோள்பட்டை வலியினையும் எளிதாக குறைக்க முடியும்.
  • கம்ப்யூட்டர் திரையின் வெளிச்சத்தினை குறைத்து வைத்து கொள்வது மிக அவசியமான ஒன்றாகும். இதனால் கண்களை எளிதாக பாதுகாக்கலாம். இங்கே கூறப்பட்டுள்ளதெல்லாம் சின்ன சின்ன வழிகள் தான். இருப்பினும் இதை பின்பற்றுவதால் உடலை நல்லமுறையில் பாதுகாக்க முடியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline