விப்ரோ வேலைய உதறிதள்ளிட்டு விவசாயம் பார்க்க வந்திட்டேன்.
இன்போசிஸின் ஏசி கரை வேண்டானுட்டு எருமை மேய்க்க வந்திடேன்.
ஐந்துலட்ச ரூபா டி.சி.எஸ் சம்பளத்தை மதிக்காம ஆட்டுப்பண்ணை வைக்கப்போறேன்..
-இப்படியான ஐ.டி.கம்பெனி ஊழியர்களின் பேட்டிகள் ஏதாவது ஊடகத்தில் வெளியாகி, அதை பார்க்கும் நம் போன்ற அன்றாடம் காய்ச்சிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன.
இப்படி இவர்கள் அருமையான வேலைகளை உதறித்தள்ளிவிட்டு
விவசாயத்தின் பக்கம் வருவதை வரவேற்கிறோம் என்பதில் இரு மாறு பட்ட
கருத்திற்கு இடமில்லை.
ஆனால், எந்த முன் அனுபவமும் இல்லாத, விவசாயத்தில் ‘கிழக்கு’ மேற்கு தெரியாத இவர்கள் நேரடியாக விவசாயத்தில் கால்பதிக்கிறார்கள். ஆர்வக்கோளாறில் அவசரப்பட்டு ஒருலட்சம் ரூபாய் விலை போகும் நிலத்தை ஒன்பதுலட்சம் கொடுத்து வாங்குகிறார்கள்.
, சொகுசுப்பண்ணை வீடு,சிமெண்ட் சுற்றுசுவர், தேவையில்லாத விவசாய சாதனங்கள் என்று செலவு செய்கிறார்கள்,
அனுபவம் இல்லாததால் தவறான சாகுபடி முறையை கடைபிடித்து தோற்றுப்போகிறார்கள் பெரும்பாலான ஐ.டி. விவசாயிகள்.
இதைப்போக்க ஒரே வழி! விவசாய ஆர்வத்தில் வருபவர்கள், உடனே அதில் இறங்காமல். குறைந்தபட்சம் இரண்டு வருடங்களாவது வேறு பண்ணையில் வேலைபார்க்க வேண்டும். அல்லது குத்தகை நிலத்தை எடுத்து சிலகாலம் விவசாயம் பார்த்து அந்த அனுபவத்தில், சொந்த நிலம் வாங்கி விவசாயி ஆகலாம்.
–govindpswami