உதவி என்று கேட்டல்
பல நேரங்களில் நாம் நமக்கு பிடித்தவர்கள் கேட்கும் உதவிகளை / தேவைகளை நாம் யோசிப்பதே இல்லை . அப்படி யோசித்து நாம் செய்ய முடியாமல் போகும் பொழுது நாம் கேட்டவர்களில் பிடிக்காதவர்கள் பட்டியலில் சேர்ந்து விடுகிறோம்.
நண்பர் ஒருவர் பேசியது
எனக்கு பிடித்தவர்கள் என்னிடம் உதவி என்று கேட்கும் போது நான் யோசிப்பது இல்லை. முடியும் , முடியாது என்று உடனே சொல்லிவிடுவேன்.
எனக்கு பிடிக்காதவர்கள் உதவி என்று கேட்கும் போது அவர்களின் பெயரை கூட நான் சிந்திப்பது இல்லை.இதனால் நான் எப்பொழுதும் அவரின் கெட்டவர்கள் என்ற பக்கத்தில் நான் இருந்து விடுகிறேன். இது வும் ஒரு வகையில் நிம்மதியே .