இன்சுலின் உங்களுக்கு நண்பனா? எதிரியா?
இன்சுலின் உங்களுக்கு நண்பனா? எதிரியா? என்று கேள்வி கேட்டால் பதில், முதலில் நீங்கள் யார்? என்ற அடுத்த கேள்விதான் பிறக்கும். இன்சுலின் எல்லோருக்கும் எதிரி கிடையாது, அதே மாதிரி நண்பனும் கிடையாது.
இன்சுலின் ஒரு வளர்ச்சிக்கான ஹர்மோனகவும் செயல்படுகிறது (GROWTH HORMONE). அதே சமயத்தில், ஒரு கட்டத்தில் நிறைய வியாதிகளுக்கும் இதுவே ஒரு முக்கிய காரணியாகவும் இருக்கிறது.
நம் நண்பன்போல், தோளில் கைபோட்டுகொண்டு கூடவே நடந்துவரும், திடிரென்று, பாக்கெட்டிலிருந்து கத்தியை எடுத்து கழுத்தில் வைத்து மிரட்ட ஆரம்பித்துவிடும்.
இன்சுலினை எப்படி அணுகவேண்டும் என்றால்
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
இதுபோல மிகவும் அருகில்போகாமலும், அதிகமாக தள்ளிபோகமலும் சமநிலையை கடைப்பிடிக்கதெரிந்தவர்கள் சமாளித்துகொள்ளலாம்.
இதற்குதான் ஏகப்பட்ட உணவுமுறைகள் உள்ளது. இன்சுலின் சுரப்பை அதிகமாக்காமல் உங்கள் கட்டுபாட்டுக்குள் வைத்திருக்க தெரியவேண்டும். அதை அதிகமாக வேலைவாங்காமல் இருந்தால் உங்கள் காலை சுற்றிவரும் நாய்குட்டி போல் உங்கள் சொல்கேட்கும். இவையெல்லாம் உங்களுக்கு இன்சுலின் பிரச்சனையோ அல்லது இன்சுலின் எதிர்ப்போ (INSULIN RESISTANCE) வராமிலிருக்கும் வரைதான்.
இன்சுலின் எதற்க்காக தேவைபடுகிறது?
முக்கியமாக ஹர்போஹைட்ரேட்டிலிருந்து வரும் குளுக்கோசை, செல்லுக்குள் அனுப்பிவைக்கும் கதவை திறக்கும் சாவி இன்சுலினிடம் மட்டும்தான் உள்ளது. ஹர்போஹைட்ரேட் என்பது தாவரங்களின் உணவுசேகரிப்பு.
இன்சுலின் பிரச்சனை
இன்சுலின் பிரச்சனை உங்களுக்கு எப்போது வருகிறது. நீரழிவு நோய் வந்த பின்தான் நிறைய பேர்களுக்கு தெரிய வருகிறது. நீரழிவு நோய்க்காண இரத்த பரிசோதனை செய்து அதில் உங்களுக்கு நீரழிவு நோய் இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்தால் சரியா? இல்லை, ஒரளவிற்கு சரி. உங்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு (INSULIN RESISTANCE) இருந்தாலும் இன்சுலின் பிரச்சனைதான்.
இன்சுலின் எதிர்ப்பு ஏன் வருகிறது.
தொடர்ந்து அதிகமாக ஹர்போஹைட்ரேட் சாப்பிட்டாலோ, அல்லது ஒரே நேரத்தில் அதிகளவு ஹர்போஹைட்ரேட் எடுத்துகொண்டாலோ இன்சுலின் எதிர்ப்பு வருவதற்கான சாத்தியகூறுகள் அதிகம்.
அதிகமாக ஹர்போஹைட்ரேட் சாப்பிடும்போது அதை செல்லுக்குள் கொண்டுசெல்ல இன்சுலின் சுரப்பு அதிகமாகிறது. ஒரே நேரத்தில் அதிகளவு ஹர்போஹைட்ரேட் எடுத்துகொண்டாலும் அதை சமாளிக்க இன்சுலின் சுரப்பு அதிகமாகிறது. இப்படி அதிகளவு இன்சுலின் சுரப்பை தொடர்ந்து செய்துவந்தால், இன்சுலின் செல்லை திறக்க வைக்கும் சக்தி குறைந்துவிடுகிறது. அதை சமாளிக்க இன்னும் அதிகளவு இன்சுலின் சுரக்கிறது. குறைந்தளவு குளுக்கோசை, செல்லுக்குள் அனுப்பிவைக்க அதிகளவு இன்சுலின் தேவைப்படுகிறது. இந்த நிலைமைதான் இன்சுலின் எதிர்ப்பு. இன்சுலின் எதிர்ப்பு வந்துவிட்டாலே நிறைய தொந்தரவுகள் நம்மை தேடி வர ஆரம்பித்துவிடும்.
இதிலிருந்து நமக்கு தெரியவருவது. உணவு உட்கொள்வதால் மட்டும் நமக்கு கலோரி கிடைத்துவிடுவதில்லை அதற்கு நமக்கு சில வேதிப்பொருட்களின் துணையும் தேவையிருக்கிறது.
அந்த வேதிப்பொருட்களை நாம் சரியாக கையாளாவிட்டால் பாதிப்பையும் உண்டாக்கிவிடும்.
வெறும் கலோரி மட்டும்தான் பிரச்னை என்றால் அதை உடற்பயிற்சி செய்து சரிசெய்துவிடலாம்.
இதற்க்கு ஒரு உதாரணம் பார்க்கலாம். நீங்கள் ஒரு லட்டு சாப்பிடுகிறிர்கள் என்று வைத்துகொள்வோம்.
இதனால் நமக்கு கிடைக்கும் கலோரியை நாம் எதாவது வேலை அல்லது உடற்பயிற்சி செய்து செய்து அதை காலி பண்ணிவிடலாம், ஆனால் இது GI அதிகளவுள்ள ஹர்போஹைட்ரேட் உணவு, இது உடனே அதிகளவு இன்சுலினை சுரக்கசெய்த்து அதை கலோரியாக மாற்றும். இப்படி அடிக்கடி செய்யும்போதுதான் இன்சுலின் எதிர்ப்பு வருகிறது.
இன்சுலின் பிரச்சனை வந்துவிட்டால் என்ன செய்வது?
இன்சுலின் சுரப்பை குறைக்கவேண்டும். முடிந்தால் சுரக்காமல் நிறுத்திவைக்கவேண்டும். இது ஹர்போஹைட்ரேட் உணவுகளில் சாத்தியமில்லை. அப்போ இதற்க்கு எதிரான, இன்சுலின் தேவைபடாத ஒரு உணவு முறைக்கு மாறவேண்டியிருக்கும். அதைதான் பேலியோ உணவுமுறை கடைப்பிடிக்கிறது.
நன்றி : எல்லா புகழும் ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுமதிருக்கு மட்டுமே