அப்பா

தன் தந்தையைப் பற்றி ஒரு மகனின் கண்ணோட்டம்.

5 ஆவது வயதில் – எங்கப்பாவால முடியாத காரியம் எதுவுமே கிடையாது, அவரால் எதுவும் செய்ய முடியும், அவர் மிகவும் கெட்டிக்காரர்.

10 ஆவது வயதில் – ஏனோ எங்கப்பாவிற்க்கு சில விசயங்கள் புரியவே மாட்டேங்குது, விளையாடவே விடமாட்டேங்குறார், எப்போதும் படி படி என்கிறார்.

15 ஆவது வயதில் – அப்பா இருந்த காலம் வேறு, இப்ப காலம் எவ்வளவோ மாறிப் போச்சு, அவருக்கு வயசாயிட்டதால ஒண்ணுமே புரிய மாட்டேங்குது, பழசையே நினைத்துக் கொண்டு பேசுகிறார்.

18 ஆவது வயதில் – போயும் போயும் அப்பாகிட்ட போய் இதை ஏன் கேட்டேன், நல்லா குழப்பி விட்டுட்டார்.

21 ஆவது வயதில் – ஐயோ எங்கப்பாவா ? ஒரு நிமிஷம் கூட உட்கார்ந்து பேச முடியாது, சரியான அறுவைக் கேசு, சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லுவார்.

30 ஆவது வயதில் – என்னதான் இருந்தாலும் அப்பாவுக்கு அனுபவம்ன்னு ஒன்னு இருக்குல்ல, அவர் யோசனையும் கொஞ்சம் கேட்டுக்கலாம்.

35 ஆவது வயதில் – சாரி ! எதற்கும் அப்பாவிடமும் ஒரு வாரத்தை கேட்டுக்கிறேன், அவரிடம் கேட்க்காமல் எதையும் நான் செய்வதில்லை.

40 ஆவது வயதில் – ஹூம்… !! இப்ப மட்டும் அப்பா இருந்திருந்தால், எவ்ளோ நல்ல ஐடியா கொடுத்திருப்பார், அவருடைய முன் யோசனையும் புத்திசாலித்தனமும் தைரியமும் இனி யாருக்கு வரும்…? எல்லாமே அவருக்கு தனி.

50 ஆவது வயதில் – ஐய்யோ… கடவுளே…. அப்பா இல்லை என்பதை நினைத்துக்கூட பார்க்க முடிய வில்லையே…
எத்தனையோ விசயங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டிருக்கலாம், அலட்சியமாக இருந்து விட்டேனே…
இப்போ நினைச்சாலும் தாங்க முடியவில்லையே…

உயிரோடு இருக்கும் போது தந்தையின் மதிப்பு தெரியாது.

நம் அனைவரின் மதிப்பு மிகுந்த தந்தைகள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன். நன்றி….

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *