5 கிலோ கங்காரு சாணமும் – 1 லிட்டர் மூத்திரமும்
எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. உள்ளூரில் உள்ள மனநல மருத்துவர்கள் எல்லோரும் பரிசோதனை பண்ணி பார்த்துவிட்டார்கள். ஏதோ வாயில் நுழையாத ஸின்ட்ரோம் வந்துள்ளது என முடிவுக்கு வந்து இந்த ஊரில் இதற்கு சிகிச்சை இல்லை எனவே ஆஸ்திரேலியாவிலுள்ள பிரபல மூளை நிபுணர் டாக்டர். ஃபிராங்க் அவர்களுக்கு சிபாரிசு கடிதம் கொடுத்து விசா எடுத்து அனுப்பிவைத்து விட்டார்கள்.
ஆஸ்திரேலியாவில் மெல்பெர்ன் நகரத்தில் அந்த மனநல மருத்துவமனையில் மயக்க ஊசி போட்டு என் மூளையை ஸ்கேன் செய்து ஆராய்ச்சி செய்ததில் எனக்கு வந்திருக்கும் நோய் கோடியில் ஒருவருக்கு வருமாம். எப்போதுமே இயற்கையைப் பற்றியும், சுற்றுச்சூழலைப் பற்றியும், சமூக அவலங்களை பற்றியும், பயனற்று இருக்கும் மனிதனின் ஆறாம் அறிவை பற்றியும் நினைத்து கொண்டிருப்பதால் வந்திருக்கிறது என டாக்டர் ஃபிராங்க் என் மனைவியிடம் விவரித்திருக்கிறார்.
பின் என் மனைவியிடம் என் வரலாற்றைக் கேட்டிருக்கிறார். என் மனைவியும், “இவர் 13 வருடங்களாக கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்து 2 வருடத்திற்கு முன்னாடி வேலைய விட்டுட்டு இயற்கை விவசாயம் செஞ்சி தற்சார்பு வாழ்க்கை வாழ அவருடைய ஊருக்கே வந்துட்டார். இப்போது ஒரு 34 சென்ட் இடத்துல ஒரு குறும்பண்ணைய உருவாக்கி வாழ்ந்துவருகிறோம். ஒருநாள் சும்மா இருக்காமல் ஒரு டிவிக்குப் பேட்டி கொடுக்க போய் பலர் எங்கள் பண்ணையைப் பார்க்க வருகிறார்கள். நேர்லையும் சரி ஃபோன்லையும் சரி மணி கணக்கா இத பத்தியே தான் பேசிகிட்டு இருப்பாரு. இப்டி இருக்கும்போது தான் இப்படியாகிவிட்டது. எப்பவுமே சும்மாவே இருக்க மாட்டார் சாணியிலும் சகதியிலுமே கிடப்பார், ஏதாவது செடி நட்டு கொண்டும், விதைப்போட்டு கொண்டும், ஆடு, கோழி என்றே இருப்பார்” என சொல்லியிருக்கிறார்.
உடனே டாக்டர் “இந்த நோயை சரி செய்வது மிக எளிது. அதற்கு உங்கள் குடும்பத்தோடு கொஞ்சம் ஒத்துழைக்க வேண்டும். முதலில் உங்கள் கணவரை மாதம் 5 இலட்ச ரூபாயில் ஒரு நல்ல வேலையைத் தேட சொல்லுங்கள், வெளிநாடு என்றால் இன்னும் விரைவில் குணமாக வாய்ப்புள்ளது. முக்கியமாக அவருக்கு வீட்டைப் பற்றிய நினைப்பே வரக்கூடாது. பெரிய நிறுவனத்தில் அதையெல்லாம் பார்த்து கொள்வார்கள். இயற்கை ஆர்வலர்கள், இயற்கை நலம் விரும்பிகள், இயற்கை விவசாயத்திற்கு வர துடிக்கும் ஐடி நண்பர்கள் என எல்லோருடைய நட்பையும் துண்டித்துவிடுங்கள்.
இப்போது இருக்கும் இடத்தை விற்றுவிட்டு ஹாட் ஆஃப் த சிட்டியில் கம்யூனிட்டி ஹால், கார்டன், சும்மிங் பூல் என பல வசதி கொண்ட ஒரு ஃபிளெட் வாங்குங்கள். நீங்கள் அங்கே வசித்து கொண்டு, ஒரு நல்ல பிரைவேட் பாங்கில் வீட்டு கடன் வாங்கி இன்னொரு வீடு வாங்கினால் உங்கள் கணவருக்கு வருமான வரி விலக்கும் கிடைக்கும் அந்த வீட்டை வாடகைக்கு விட்டு அதிலிருந்தும் ஒரு வருவாயும் கிடைக்கும்.
அடுத்து குடும்பத்தோடு மருத்துவ காப்பீடு எடுத்துக்கொள்வது நல்லது. பெரிய நிறுவனங்களில் வேலை பார்க்கும்போது அதையெல்லாம் பார்த்துக்கொள்வார்கள். இன்றைய காலகட்டத்தில் புதுசு புதுசாக பல நோய்கள் வந்து கொண்டே இருக்கிறது, அதற்கெல்லாம் செலவு செய்வது உங்களை போன்ற நடுத்தர குடும்பத்திற்கு எட்டாத கனியாக இருக்கும். இப்போது பாருங்கள் எவ்வளவு பெரிய மனநோயால் உங்கள் கணவர் வாடுகிறார். உங்களுக்கு காப்பீடு மட்டும் இருந்திருந்தால் எல்லா மருத்துவ செலவையும் இலவசமாக செய்து விட்டு, இந்த நோயையும் மருத்துவ காப்பீடு நிறுவனத்தின் நோய்கள் பட்டியலில் அப்டேட் செய்திருப்போம்.
என் மனைவி அப்பாவியாய், “சரி டாக்டர்.. சாப்பாடு பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்”
டாக்டர் என் மனைவியை பேச விடாமல் இனிமேல் நாங்கள் எவ்வாறு வாழ வேண்டும் என ஒரு பெரிய லிஸ்டே கொடுக்கிறார்:
“கட்டாயம் காலையில் பர்கர், பிரட் சேன்ட்விட்ஜ் என ஏதாவது கொடுக்கலாம், மதியம் நீங்களே ஆபிஸுக்கு பீட்சா ஆர்டர் பண்ணிலாம். கோக், பெப்ஸி என குளிர் பானங்கள் என்றும் சிறந்தவை. இரவு டின்னருக்கு ஏதாவது ஒரு ரூஃப் டாப் ரெஸ்டாரண்டுக்கு போகலாம். அவ்வபோது கம்பெனியிலும் டீம் டின்னர், டீம் லஞ்ச் தருவார்கள் அதிலும் கலந்து கொண்டால் கொஞ்சம் பணத்தை சேமித்துக்கொள்ளலாம்.
வீக்எண்ட் ஏதாவது மல்டி ஸ்பெஷல் மாலுக்குப் போகலாம், அங்கே சினிமா பார்க்கலாம், பூல் விளையாடலாம், இரவு பப்புக்குப் போகலாம். இதெல்லாம் ஒரு நல்ல stress relief ஆக இருக்கும்.
ஹாலிடேஸ் பற்றி கவலைப்பட வேண்டாம். ஏதாவது ஒரு ஹில் வியூ ரிசார்ட் போங்கள். அங்கே இன்னும் பல கவர்ச்சியான விஷயங்கள் இருக்கும் உங்கள் குழந்தைக்கும் ரொம்ப பிடிக்கும். குழந்தைக்கு ஒரு சேஜ்சாக இருக்கும். ஜூலா, சறுக்கு என அவள் ஜாலியாக இருப்பாள்.
குழந்தை என்றவுடன் தான் ஒன்று நினைவுக்கு வருகிறது. அவளை ஏதாவது ஒரு சிறந்த இண்டர்நேஷனல் ஸ்கூலில் சேருங்கள் அவளுடைய எதிர்காலம் மிகவும் முக்கியம். ஒரு நல்ல கல்வியைக் கொடுப்பது பெற்றோர்களின் கடமை.
அவ்வப்போது உங்கள் இருவரின் பெற்றோருக்கும் ஃபிளைட்டில் டிக்கெட் புக் பண்ணி உங்கள் வீட்டுக்கு வர வையுங்கள். மிகவும் கௌரவமாகவும், பெருமையாகவும் இருக்கும்.
டாக்டர் இந்த லிஸ்ட்டை சொல்லி முடிக்கும்போது…
“இதெல்லாம் விட்டுவிட்டு தானே இந்த பாழா போன பைத்தியக்காரன் பேச்சு கேட்டு ஊருக்குப் போனேன். எவ்வளவு நிம்மதியான வாழ்க்கை அத வுட்டுட்டு சாணிக்குள்ளேயும் சகதிக்குள்ளேயும் கிடந்து இப்ப பைத்தியம் பிடிச்சி படுத்துக்கிடக்கிறானே. ஊருல இனி ஒரு பய நம்மள மதிப்பானா?” என் மனைவி சிந்தனையில் மூழ்கியவாறு, ‘அவருக்கு இந்த மெல்பெர்ன் நகரத்தில் ஏதாவது வேலை கிடைக்குமா’ என என் மனைவி டாக்டரிடம் வினவ…
அப்போது சுய நினைவுக்கு வந்த நான் டாக்டரிடம், “ஏன் டாக்டர் எங்க ஊர்ல நாட்டுப்பசுவோட சாணியையும், மூத்திரத்தையும், நாட்டு சர்க்கரையையும் கரைச்சி நிலத்துல உட்டா அதுல இருந்துதான் நிறைய மண்புழு வரும்னு நிறைய பேர் பீலா விட்டுக்கிட்டு இருக்காங்க, இங்க தான் நிறைய காங்காரு இருக்குதுல்லா அதோட சாணத்துல மண்புழு எப்படி வருதுன்னு ஆராய்ச்சி பண்ற இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் யாராவது இருக்காங்களான்னு கொஞ்சம் சொல்லுங்களேன்.” என்றேன்.
டாக்டர் உடனே பக்கத்தில் நின்ற நர்ஸ் அக்காவை கண்ணை காட்ட மீண்டும் அதே இடத்தில் ஊசியால் ஒரே குத்து மீண்டும் மயக்க நிலைக்கு சென்றுவிட்டேன்.
மற்றவர் நலத்திறற்கு கொஞ்