தசகவ்யா எப்படி தயாரிப்பது?

தசகவ்யா எப்படி தயாரிப்பது?

தசகவ்யா என்பது பஞ்சகவ்யாவில் மேலும் சில தாவரங்களின் சாறுகளைச் சேர்த்து மேம்படுத்தப்பட்டதாகும். இதனால் பஞ்சகவ்யா மேலும் மெருகேற்றப்பட்டு நல்லபயனளிக்கிறது.
இதைப் பயிரின் மீது தெளிக்கும் போது பெரும்பாலான பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.

தசகவ்யா தயாரிப்பதற்கு தேவையான பூச்சிகளையும் நோய் களையும்விரட்டக்கூடிய ஐந்து மூலிகைச் செடிகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.

அவைகளானவை
ஆடாதொடை (Adhatoda vasaca)1 kg.
ஊமத்தை (Datyra metal) 1 kg.
நொச்சி (Vetex negundo) 1 kg.
வெள்ளை எருக்கு (Calotropis gigantea) 1 kg.
வேப்பிலை (Azadirachta indica) 1 kg.

மேலே கூறிய தழைகளையும் பசுவின் கோமியத்தையும் 1 : 1.5 என்ற விகிதத்தில் பத்து நாட்களுக்கு பிளாஸ்டிக்தொட்டியில் ஊரவைக்க வேண்டும். 11 நாட்கள் கழித்து தழைதனை தனியாகப் பிரித்தெடுத்து விட்டு சாறுதனை தசகவ்யா தயாரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.தயாரித்த சாறுகளை பஞ்ணகவ்யாவில் 1:3 என்ற விகிதத்தில் கலந்து 25 நாட்களிக்கு வைத்திருக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு ஒரு முறை கிளறிவிடவேண்டும். 25 நாட் களுக்குப் பிறகு 3 சதவீதக்கரைசலைத் தெளிப்பதற்கு பயன்படுத்தலாம்.

பயன்கள்

1. தசகவ்யா தெளிப்பதால் பஞ்சகவ்யாவின் அனைத்து பயன்களையும் பெறுவதோடு பயிருக்கு பூச்சி மற்றும்  நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் கிடைக்கிறது. இதனால் பூச்சி மற்றும் நோய்களின் தாக்கம் தவிர்க்கப்படுகிறது.
2. பயிர், மரம் மற்றும் மரக் கன்றுகளுக்கு தழை, மணி, சாம்பல், கால்சியம், மற்றும் மக்னீசியம் சத்துக்கள் அதிக அளவில் கிடைக்கிறது.
3. தசகவ்ய தெளிப்பதால் காய்கறிப் பயிர்கள், மரம் மற்றும்  மரக் கன்றுகளுக்கு, பூக்கள் மற்றும் இலைகளின் எண்ணிக்கை அதிகமாகும்.
4. “தசகவ்யா’ கரைசலை தெளிப்பதால், மாவுப்பூச்சி உள்ளிட்ட எந்தப்பூச்சி, வண்டின் தாக்குதலும் கிடையாது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline