‘கரும்பு தின்னக் கூலி கொடுக்கணுமா?’னு சொல்வழக்கு ஒண்ணு இருக்கு. ஆனா, கரும்பு திங்காததால, நாமெல்லாம் கூலி கொடுத்துட்டிருக்கோம் இந்தக் காலத்துல! அதாவது, நம்மளோட உணவுகள் எல்லாமே, நாக்குக்கு மட்டுமில்லீங்க ஒட்டுமொத்த உடம்புக்கும் ஏத்தமாதிரி அமைச்சு வெச்சுருக்காங்க முன்னோருங்க. ஒவ்வொண்ணுலயும் என்னென்ன சத்து இருக்கு… மருந்து இருக்குனு பார்த்துப் பார்த்து அனுபவத்தால கண்டுபிடிச்சு பழக்கப்படுத்திட்டு போயிருக்காங்க. ஆனா, அந்த வரிசையில வர்ற கரும்பை நாமெல்லாம் இப்ப சாப்பிடறதே அபூர்வமா இருக்கு. கரும்பைக் கடிச்சு தின்னக்கூட நேரம் இல்லாம, கரும்புச்சாறு வாங்கி குடிச்சுட்டு பொழப்பை ஓட்டிட்டிருக்கோம். கரும்பு கிடைக்கிற சீசன்ல, கரும்பை வெட்டி நல்லா பல்லால கடிச்சி மென்னு சுவைச்சா… பல்லுங்க பளீர்னு வெள்ளையா இருக்கும். இதனால, பல் சுத்தத்துக்காக டாக்டருங்கிட்ட வருஷத்துக்கு ஒரு தடவையோ… ரெண்டு தடவையோ கொடுக்கற செலவு மிச்சமாகும்தானே
பல் சுத்தத்துக்காக இயற்கை டாக்டரு
Related Posts

இயற்கையை சீரழிப்பதால் ஏற்படும் நோய்பாதிப்புகள் நீரிழிவு மற்றும் பலஉடல் நோய்

கிரீன் டீயில் இவ்வளவு நன்மைகளா?

கண் பார்வை தெளிவாக

வீட்டுல கரப்பான் பூச்சி தொல்லையா

எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள்:

மண்புழு உங்களுக்கு தரும் உரமான வருமானம் !

ஏலக்காய்ல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா

கம்பு வடை செய்முறை – Kambu vadai vadai recipe in tamil

கோழி வளர்க்க 9 விஷயம்

