ஜீவாமிர்தம் தயாரிப்பது எப்படி ?-( ஒரு ஏக்கர் )
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தேவையான பொருட்கள்:
நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ
நாட்டு பசுங்கோமியம் 10 லிட்டர்
வெல்லம் (கருப்பு நிறம்) 2 கிலோ (அ) கரும்புச்சாறு 4 லிட்டர் ( அ ) பனம் பழம் -4
பயறு வகை மாவு – 2 கிலோ (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து)
பயன் படுத்தும் நிலத்தின் வரப்பிலிருந்து எடுக்கப் பட்ட மண் கையளவு
தண்ணீர் 200 லிட்டர் (குளோரின் கலக்காதது)
தயாரிப்பு முறை:
###############
தொட்டியில் நாட்டு பசுஞ்சாணம், நாட்டு பசுங்கோமியம் ,பயறு வகை மாவு,வெல்லம் இவற்றை முதலில் நன்கு கட்டி இல்லாதவாறு கரைத்து கொள்ள வேண்டும் .இதனுடன் 200 லிட்டர் தண்ணிரை சேர்த்து நிழலான இடத்தில தொட்டியின் வாய் பகுதியை முடி வைக்க வேண்டும் . தினமும் 2 முறை 3 நாட்களுக்கு தவறாமல் கடிகார சுற்றில் ஒரு குச்சியின் முலம் நன்றாக ஒரு நிமிடம் கலக்கி விடவேண்டும்.
ஒரு கிராம் மண்ணில் 5 லட்சம் கோடிக்கும் அதிகமான் நுண்ணுயிரிகள் இருக்கின்றன் .ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் இந்த நுண்ணுயிரிகள் இரட்டிப்பு அடைகின்றன். இந்த நுண்ணுயிர் கலவைதான் ஜிவாமிர்தம்.
பயன்படுத்தும் முறை:
~~~~~~~~~~~~~~~~~~~~~
ஜிவாமிர்தம் எல்லா வகை பயிர்களுக்கும் நீரில் கலந்து பயன்படுத்தலாம். எந்த வகையான கட்டுப்பாடும் இல்லை.


விவசாயம் சார்ந்த பயனுள்ல தகவல்
தொட்டியின் வாய் பகுதியை மூடி எத்தனை நாட்கள் வைக்கவேண்டும்?
எத்தனை நாட்களுக்கு பிறகு ஜீவாமிர்தம் தயார் ஆகும்?
10 லிட்டர் தண்ணீருக்கு எவ்வளவு ஜீவாமிர்தம் கலந்து தெளிக்க வேண்டும்??