வைட்டமின் டி

vitamin-D_p[annaiyar_paleo

வைட்டமின் டி என பொதுவாக சொல்லபட்டாலும் அதில் இரு வகைகள் உண்டு. ஒன்று தாவரங்களில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி2. இன்னொன்று சூரியன் மூலம் நமக்கு கிடைக்கும் வைட்டமின் டி3. இந்த இரண்டையும் ஒப்பிடவே முடியாது. டி2வால் நமக்கு எப்பலனும் கிடையாது. ஆனால் டி3 இருக்கே? அதுமட்டும் ஒரு மருந்தாக கடையில் விற்க்கபட்டால் அதை கண்டுபிடித்தவருக்கு நோபல் பரிசே கிடைக்கும் எனும் அளவுக்கு முக்கிய மருந்து இது

டயபடிஸ் என்பது இப்போது வைட்டமின் டி3 குறைபாட்டால் வருவது என கண்டறிந்து வருகிறார்கள். டைப் 1 டயபடிஸ் ஏன் வருகிறது, எதற்கு வருகிறது என புரியாமல் முழித்தார்கள். ஆனால் குழந்தை பிறந்தவுடன் அதை மதியம் வெயிலில் காட்டி எடுத்தால் அக்குழந்தைக்கு டைப் 1 டயபடிஸ் வரும் வாய்ப்புகள் பெருமளவு குறைவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. அதேபோல பிள்ளையின் தாய்க்கு வைட்டமின் டி3 பற்றாகுறை இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு டைப்1 டயபடிஸ் வரும் வாய்ப்பும் அதிகம்.

இது குறித்து பின்லாந்தில் ஒரு ஆய்வு நடத்தபட்டது. பின்லாந்து மிக குளிரான நாடு. சூரியன் அடிக்கடி எட்டிபார்க்காத தேசம். இங்கே தான் உலகிலேயே அதிக அளவில் டைப் 1 டயபடிஸ் இருக்கிறது. 1960ல் குழந்தைகளுக்கு தினம் 2000 ஐயு அளவு டி3 வைட்டமின் கொடுக்க பரிந்துரை செய்யபட்டது. 30 வருடம் கழித்து மறுஆய்வு செய்ததில் டைப்1 டயபடிஸ் வந்த குழந்தைகளின் தாய்மார்கள் பலரும் அவர்களுக்கு வைட்டமின் டி3 சப்ளிமெண்ட் கொடுக்கவேண்டும் என்பதே தமக்கு தெரியாது எனகூறீனார்கள்.

அதேசமயம் டி3 வைட்டமின் டைப் 1 டயபடிஸ் வராமல் தடுக்குமே ஒழிய, வந்த டைப் 1 டயபடிஸை குணபடுத்தாது. ஆக டைப்1 வராமல் தடுக்க வைட்டமின் டி3 மிக, மிக அவசியம்,..பிள்ளைக்கும், தாய்க்கும்.

சூரிய ஒளி நம் தோலில் படுகையில் நம் தோல் அதை வைத்து டி3 வைட்டமினை தயாரிக்கிறது. ஆனால் மருந்து, மாத்திரையில் கிடைக்கும் வைட்டமின் டி3க்கும் நம் உடல் உற்பத்தி செய்யும் டி3க்கும் இடையே வேறுபாடு உள்ளது. டி3 என்பது கொழுப்பில் கரையும் வைட்டமின். ஆக டி3 மாத்திரை எடுத்தால் அதனுடன் உறைகொழுப்பும் சேர்த்து எடுத்தால் தான் அது உடலில் சேரும். ஆனால் சூரிய ஒளியால் கிடைக்கும் டி3க்கு இச்சிக்கல் எல்லாம் இல்லை. உடல் நேரடியாக அதை ஹார்மோனாகவே தயாரிக்கிறது. அதனால் மருத்துவர்கள் இதை “சூரிய ஹார்மோன்” என அழைக்கிறார்கள். டி3 ஹார்மோன் தய்ராய்டு ஹார்மோன், டெஸ்டெஸ்ட்ரோன் ஹார்மோன் போல உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் மிக அவசியமான ஹார்மோன். அது நம் உடலில் சேர உறைகொழுப்பு எல்லாம் அவசியமில்லை.

கொழுப்பில் கரையும் ஹார்மோன் என்பதால் டி3 அளவுகள் அதிகரித்தால் அது சிறுநீரில் கலந்து வெளியே வந்துவிடாது. ஆக ஓவர்டோஸ் ஆகும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் சூரிய ஒளியால் கிடைக்கும் டி3ல் இப்பிரச்சனையும் இல்லை. நம் உடலுக்கு போதுமான அளவு டி3 கிடைத்தவுடன் உடல் தானாக டி3யை உற்பத்தி செய்வதை நிறுத்திவிடும்.

டி3 கால்ஷியம் மேலாண்மை மற்றும் க்ளுகோஸ் மேலாண்மையில் பெரும்பங்கு வகிக்கிறது. கால்ஷியம் இருந்தால் எலும்புகள் வலுப்பெறும் என முன்பு நம்பினார்கள். ஆனால் டி3 குறைபாடு இருந்தால் அதன்பின் நீங்கள் லிட்டர் லிட்டராக பால் குடித்தாலும் அதனால் பலனில்லை. பாலில் உள்ள கால்ஷியம் முழுக்க எலும்புகள், பற்களில் சென்று சேராமல் கிட்னி, இதயம் என படிந்துவிடுவதால் எலும்புகள் பலமிழந்து ஆத்ரைட்டிஸ், ஒஸ்டிரியோபொசிஸ் வரும்.

ஒருவருக்கு மாரடைப்பு ரிஸ்க் வருகிறதா என்பதை எப்படி அறிவது? கால்ஷியம் ஸ்கான் எடுத்தால் போதும். இதயநரம்பு சுவர்களில் கால்ஷியம் படிந்தால் அவருக்கு மாரடைப்பு வரும் என அறியலாம். ஆக ஆச்டிரியோபொசிஸ் சொசைட்டி இப்பல்லாம் “ஆச்டிரியோபொசிஸ் வராமல் இருக்க பால் குடி” என சொல்வதில்லை. மக்னிசியம், டி3, பி6 எடு எனத்தான் சொல்லிவருகிறது. இவை மூன்றும் இருந்தால் குறைந்த அளவு கால்ஷியம் எடுத்தாலும் நம் எலும்புகள் பலமாக இருக்கும். ஆதிமனிதன் பாலை குடித்ததே கிடையாது. அவனுக்கு ஏன் எலும்புகள் உறுதியாக இருந்தன? நமக்கு ஏன் இல்லை? டி3, மக்னிசியம், பி6 எனும் மும்மூர்த்திகளே இதற்கு காரணம்.

க்ளுகோஸ் மேலாண்மைக்கும் டி3 அவசியம் என்பதால் டி3 பற்றாகுறை டைப்1, டைப்2 என டயபடிஸ் வருவதில் பெரும்பங்கு வகிக்கிறது. ஜெர்மனியில் நிகழ்ந்த ஆய்வு ஒன்றில் டி3 வைட்டமினை கொடுத்து எடை குறையுமா என ஆய்வு செய்ததில் ஆய்வாளர்களே எதிர்பாராவிதமாக டி3 உட்கொண்ட ஆண்களுக்கு ஆண்மைதன்மையை அதிகரிக்கும் டெஸ்டெஸ்ட்ரோன் ஹார்மோனும் கணிசமாக அதிகரித்தது. ஆக ஆண்மைகுறைபாட்டுக்கும் டி3 அருமருந்து.

மற்றபடி டி3யின் பெருமைகளை முழுக்க விவரிப்பது சாத்தியமே இல்லை..ஆயிரம் நாவு படைத்த ஆதிசேஷனால் மட்டுமே அதைசெய்ய முடியுமே ஒழிய சாதாரண மனிதர்களான நம்மால் முடியாது. நாம் அடிப்படையில் ஆதிபகவனான சூரியனை நம்பி இருக்கும் உயிரினம். சூரியன் தன் பேரருளை நமக்கு டி3 மூலம் வழங்குகிறது.

டி3 நமக்கு முழுமையாக கிட்ட

ஆன்Dராய்டில் “டி மைன்டர்” எனும் ஆப்பை டவுன்லோடு செய்யுங்கள். உங்கள் ஊரில் எந்தெந்த சமயம் சூரிய ஒளியில் டி3 கிடைக்கும் என்பதை காட்டும்

சூரிய கதிர்களில் இருவகை புற ஊதா கதிர்கள் உண்டு. அல்ட்ராவயலட் ஏ, பி என. இதில் உச்சிவெயில் சமயம் இருக்கும் பி கதிரே நமக்கு டி3யை அள்ளிவழங்கும் அன்னதாதா. அல்ட்ராவயலட் ஏவால் பெரிதாக பலனில்லை. டி மைன்டரில் காலை 9 மணிக்கு வைட்டமின் டி கிடைக்கும் என கூறபட்டாலும் அதை நம்பவேண்டாம். உச்சிவெயிலில் 10 நிமிடம் நிற்பதே போதுமானது. அப்படி நிற்கையில்:

தலைக்கு தொப்பி அணியுங்கள். வெறும் வயிற்றில், தன்ணிகூட குடிக்காமல் சூரியனை பார்த்தபடி நின்று மயக்கம் போட்டுவிழுந்து பழியை என் மேல் போடவேண்டாம் smile emoticon

நிழலில் அமர்ந்து கை, காலை மட்டுமாவது காட்டலாம்.

நேரடி தோலில் சூரிய வெளிச்சம் படவேண்டும். கண்ணாடிக்கு பின்னிருந்து காட்டுவது கான்சரை தான் வரவழைக்கும்

எத்தனை தோல் எக்ஸ்போஸ் ஆகிறதோ அந்த அளவு டி3 உற்பத்தி கனஜோராக நடக்கும்

வைட்டமின் டியுடன், வைட்டமின் ஏ அளவுகளும் சரியாக இருப்பது அவசியம். வாரம் 1 முறை ஈரல் சாப்பிடுங்கள். தினம் முட்டை சாப்பிடுங்கள்.

குத்து மதிப்பாக சொல்வதெனில் தொப்பி, அரைகை சட்டை, ஆப்டிராயர் அணிந்திருந்தால் 25 நிமிடம் வெயிலில் நின்றால் போதும். சட்டை இல்லையெனில் 15 நிமிடம். சும்மா ஒரே நிமிடம் நின்றால் கடையில் விற்கும் டி3 மாத்திரையில் இருக்கும் அளவு டி3 கிடைத்துவிடும்….

அதிகாலை சூரிய ஒளி, மாலை சூரிய ஒளி இதமாக இருந்தாலும் அதனால் எப்பலனும் கிடையாது. அவற்றை தவிர்க்கவும்

என்ன டி3யை கனஜோராக வரவேற்க தயாராகிவிட்டீர்களா?

நன்றி :  எல்லா புகழும்  ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுமதிருக்கு மட்டுமே

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline