எத்தனை மாடுகள் !!!!
ஒரு விவசாயி வங்கிக்கு சென்று, இரண்டாயிரம் ரூபாய் கடன் கேட்டான்.
’உன்னிடம் எத்தனை மாடுகள் இருக்கின்றன? என்று அதிகாரி கேட்டார்….
”இருபது மாடுகள் ”என்றான் விவசாயி.
கடன் கொடுக்கப் பட்டது.
சில மாதங்கள் கழித்து விவசாயி நிறைய பணத்துடன் வங்கிக்கு வந்து,கடனை அடைத்தான்.
மீதிப் பணத்துடன் புறப்பட்ட அவனை பார்த்து அதிகாரி,’கையிலிருக்கும் பணத்தையும் இந்த வங்கியிலேயே போட்டு விடுங்களேன்.’என்றார்.
சந்தேகப் பார்வையுடன் விவசாயி கேட்டான்,”உங்களிடம் எத்தனை மாடுகள் உள்ளன?”