மேக்ரோ
பகுதி – 11
என்னுடைய குரு Jeff Cyr மற்றும் அவரின் நண்பர் Jamie Moskowitz சேர்ந்து Keto Saved Me என்னும் க்ரூப்பை ஆரம்பித்திருக்கிறார்கள். மிகவும் நல்ல க்ரூப். ஆங்கிலத்தில் உங்களுக்கு வழிகாட்டுதல் வேண்டுமென்றால் அங்கே தாராளமாக சேரலாம். அந்த குழுவின் முகவரி இதோ:
https://www.facebook.com/groups/ketosavedmegroup/
இன்று அந்த க்ரூப்பின் pinned post –ல் உயரத்துக்கு தகுந்தபடி, ஒருவர் எவ்வளவு ப்ரோட்டீன் எடுக்க வேண்டும் என்கிற அட்டவணை கொடுக்கப்பட்டிருந்தது. என் பார்வைக்கு அது மிகவும் சரியாகப்பட்டது. அதனால் அதை இங்கே கொடுக்கிறேன்.
திரும்பத் திரும்ப நான் ஏன் ப்ரோட்டீனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்றால், எப்பொழுதுமே ப்ரோட்டீன் தான் நம்பர் 1 மேக்ரோ நியூட்ரியெண்ட். நீங்கள் எடுக்க வேண்டிய ப்ரோட்டீன் அளவை எப்பொழுதும் எடுக்க முயற்சி செய்ய வேண்டும்.
முன்பே எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்றாலும் திரும்பவும் ஒருமுறை ஞாபகப்படுத்திக்கொள்வது நன்மை பயக்கும். நம்முடைய டயட்டில் கார்போஹைட்ரேட் 50 கிராமுக்கும் குறைவாக எடுக்கும்பொழுது, நம்முடைய உடம்பில் க்ளூகோஸால் மட்டுமே இயங்கும் ஒரு சில இடங்களுக்கு தேவையான க்ளூகோஸ் கிடைக்காது. அப்படி க்ளூகோஸால் மட்டுமே இயங்கும் இடங்கள் brain, red blood cells, the retinas, and the renal medulla area of the kidneys (the innermost part of the kidneys). ஆகவே, லிவர், க்ளூகோனியோஜெனிஸிஸ் என்னும் ப்ராசஸின் மூலம் நாம் உட்கொள்ளும் ப்ரோட்டீனிலிருந்தும் (அமீனோ அமிலங்கள்) ஃபேட்டிலிருந்தும் (Glycerol) க்ளூகோஸை தயாரித்து இந்த இடங்களுக்கு அனுப்பும். நீங்கள் சரியான அளவு ப்ரோட்டீன் சாப்பிடவில்லையெனில், உங்கள் மஸில்களிலிருந்து ப்ரோட்டீனை எடுக்கும். அதனால் மஸில் லாஸ் ஏற்படும். இதனைத் தவிர்க்க கண்டிப்பாக தேவையான அளவு ப்ரோட்டீன் சாப்பிட்டாக வேண்டும். தவிரவும், உங்கள் செல்களை புதுப்பிப்பதற்கும், திசுக்களின் வளர்ச்சிக்கும், உள்ளுறுப்புகள் குணமாவதற்கும் ப்ரோட்டீனின் பங்கு அத்தியாவசியமானது.
இப்பொழுது அந்த பட்டியலைப் பார்க்கலாம். இதில் In என்பது உயரத்தை இஞ்ச்களில் குறிக்கும். Cm என்பது உயரத்தை செண்ட்டி மீட்டரில் குறிக்கும். மூன்றாவதாக LC என்று இருப்பது நம்முடைய லோ கார்ப் டயட்டில் எத்தனை கிராம் ப்ரோட்டீன் எடுக்க வேண்டும் என்பதை குறிக்கும். நான்காவது காலம், Zc என்பது நீங்கள் கார்ப் சுத்தமாக எடுக்காமல் ஜீரோ கார்ப் டயட்டில் இருந்தால் அப்பொழுது எத்தனை கிராம் ப்ரோட்டீன் எடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கும்.
Men
Height Protein in Grams
In Cm LC ZC
60 152 68 90
61 155 71 94
62 157 75 100
63 160 78 104
64 163 81 108
65 165 84 112
66 168 88 117
67 170 92 122
68 173 95 126
69 175 98 130
70 178 101 135
71 180 105 140
72 183 108 144
73 185 111 148
74 188 115 153
75 191 119 158
76 193 122 162
77 196 125 166
78 198 128 171
79 201 132 176
80 203 135 180
உதாரணமாக என் உயரம் 183 செ.மீ. நான் நம்முடைய டயட்டில் எடுக்க வேண்டிய ப்ரோட்டீன் அளவு 108 கிராம். கார்பே எடுக்காமல் ஜீரோ கார்ப் டயட் என்றால் 144 கிராம் எடுக்கலாம்.
அடுத்து பெண்களுக்கான அட்டவணை
Women
Height Protein in Grams
In CM LC ZC
60 152 62 82
61 155 64 85
62 157 66 88
63 160 68 91
64 163 71 94
65 165 73 97
66 166 75 100
67 170 77 103
68 173 80 106
69 175 82 109
70 178 84 112
71 180 86 115
72 183 89 118
73 185 91 121
74 188 93 124
75 191 95 127
76 193 98 130
77 196 100 133
78 198 102 136
79 201 104 139
ஆக, சரியான அளவு ப்ரோட்டீன் எடுக்க எப்பொழுதும் முயற்சி செய்வோம்.
நன்றி : எல்லா புகழும் ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுமதிருக்கு மட்டுமே