நம் முன்னோர் சொன்ன, சொல்லி தந்த பல விசயங்களை நாம் மூட நம்பிக்கை என்ற பெயரில் முட்டாள் தனமாக விட்டுவிட்டோம்
பொதுவாக குளம், ஏரி கரைகளில் பிள்ளையார் கோவில் இருக்கும், இந்த நீர் நிலைகளில் குளித்து விட்டு கரை ஏறும் போது குளம், ஏரியில் இருந்து ஓர் கைப்பிடி மண்ணை எடுத்து கோவில் பக்கத்தில் உள்ள ஒரு இடத்தில் போடவேண்டும் என்பது ஒரு சாஸ்திரம்.
இந்த செயலை மூட நம்பிக்கை என்ற பெயரில் நாம் நிறுத்திவிட்டோம். ஒருவர் ஒரு நாள் ஒரு கைப்பிடி மண் எனில் ஒரு வருடம் 365 கைப்பிடி மண் எடுக்கப்படும், இது போல் எத்தனை பேர் குளிப்பார்கள், அப்படி என்றால் ஒரு இலவச தூர் வாரும் நிகழ்வு நடக்கும் இல்லையா?
இவர்கள் கொண்டு வந்து கோவில் அருகே குவிக்கும் மண்ணை (சத்து உள்ள மண் – மீன் கழிவு) விவசாயி வெட்டி எடுத்து அவன் நிலத்தில் கொண்டு போடுவாராம். இந்த செயலை மூட நம்பிக்கை என்ற பெயரில் நாம் நிறுத்திவிட்டோம்.
இன்று குளம், ஏரிகள் தூர் வாரபடாமல் காணமல் போய் கொண்டு இருகின்றன. எனவே மீண்டும் இந்த கைப்பிடி மண்ணை எடுத்து கோவில் பக்கத்தில் போடும் செயலை ஆரம்பிப்போம். வரும் காலத்தில் வரபோகும் ஆபத்தில் இருந்து மீள்வோம்.
இப்போ சொல்லுங்க மூட நம்பிக்கை என்ற பெயரில் நாம் செய்த செய்கின்ற முட்டாள் தனம் இது தானே ?