முருங்கை கீரை ஏழைகளின் அமிர்தம்

முருங்கை கீரை ஏழைகளின் அமிர்தம்

முருங்கை கீரை மாதிரி வகைகள் ஏழைகளின் அமிர்தம் எனலாம் தனது சத்துக்களின் வீரியத்தை கொஞ்சம் கொஞ்சம் ஆக இழந்து வரும் பூமியில்முருங்கை மாதிரி கீரை . அணைத்து ஜீவ சத்துக்களும் அடங்கிய இந்த கீரை ஒரு இயற்கையின் அற்புதம் தான். இது கடவுளின் கொடை .

முருங்கை கீரை

முருங்கை கீரை சூப்

வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும்.கண்களைப் பாதுகாக்க முருங்கையின் பூவை மொழி முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் முருங்கை கீரை சூப் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

முருங்கை கீரை பொடி

முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி முருங்கை கீரை பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.

முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.
இதை இயற்கையின் வயகரா எனக்கூறலாம் .இதன் பிசின் கூட மோகத்தை கூட்டவல்லது .பாலில் இட்டு இரவில் சாப்பிடலாம்.
.
இதன் காயை பற்றித்தான் பாக்கியராஜ் சினிமா மூலம் முன்பே பிரபலம் ஆக்கிவிட்டார் .காய் கறிகளில் முருங்கை சுவையானது அனைவரும் விரும்புவது .அதிக சத்துள்ளதும் கூட வீட்டுக்கொரு முருங்கை இருந்தால் வைத்தியருக்கும் வேலையில்லை .சாப்பாட்டிற்கும் கவலையில்லை ..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline