மின்னணு சாதனங்களை செகன்டுஹேண்டில் வாங்குவது எப்படி?
எலக்ட்ரானிக் சாதனங்களின் விலை அதிகரித்து கொண்டே போவதனால் செகன்டுஹேண்டு எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்க வேண்டி இருக்கிறது.
இப்படி ஒருவர் பயன்படுத்திய பொருளை வாங்கும் போது மிக கவனமாக வாங்க வேண்டும். இதற்கு இங்கு சில டிப்ஸ். மொபைல், ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர், டேப்லட் இப்படிப்பட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்கும் போது அந்த பொருள் பற்றிய தகவல்களை முன்கூட்டியே வலைத்தளங்களில் படித்து தெரிந்து கொள்வது நல்லது.
எந்த எலக்ட்ரானிக் சாதன பொருட்களை வாங்க வேண்டுமோ, அதன் மாடலை பற்றி தகவல்களை தெளிவாக வலைத்தங்களில் முதலில் தெரிந்து கொள்வது அவசியம்.
இதன் பிறகு நாம் வாங்க இருக்கும் எலக்ட்ரானிக் சாதனங்கள் பற்றி வாடிக்கையாளர்களின் கருத்தை வலைத்தளங்களில் படிக்க வேண்டும்.
லேப்டாப், ஸ்மார்ட்போன் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்கும் போது அதன் பிராசஸரை பற்றி ஆராய வேண்டும். பிராசஸரை பொருத்து தான், அந்த எலக்ட்ரானிக் சாதனம் எப்படி செயல்படும் என்பதை கூற முடியும்.
எந்த ஒரு எலக்ட்ரானிக் சாதனமாக இருப்பினும் அதன் செகன்டுஹேண்டாக வாங்கும் போது அதன் வெர்ஷன் பற்றி தெரிந்து கொள்வது முக்கியமாகும்.
உதாரணத்திற்கு ஐபோன் வாங்க வேண்டும் என்றால், அதில் நிறைய அடுத்தடுத்த வெர்ஷன்கள் உள்ளது. அந்தந்த வெர்ஷனில் உள்ள மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
அதன் பின் எலக்ட்ரனிக் சாதனங்களில் பொருத்தப்பட்டுள்ள பகுதிகள், நாம் இருக்கும் பகுதிகளில் எளிதாக கிடைக்குமா என்பது பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
சில பேர் பொருட்களை வாங்கிய பின்பு சில கோளாறுகள் ஏற்பட்டால், அதில் உள்ள பொருட்கள் எளிதாக கிடைப்பதானால் தான் அதை சரி செய்ய முடியும்.
எந்த நிறுவனத்தின் எலக்ட்ரானிக் சாதனத்தை வாங்குகிறோமோ, அந்த நிறுவனத்தின் எலக்ட்ரானிக் சாதன பொருட்கள் நமது நாட்டில் எளிதாக கிடைப்பதாக இருக்க வேண்டும்.
சில மின்னணு சாதனங்களுக்கு அதிகமாக ஸ்டோர்களே இருப்பதில்லை என்றும் வாடிக்கையாளர்களின் குற்றச்சாட்டுகள் இருக்கிறன. இதையும் கவனத்தில் வைத்து கொள்ள வேண்டும்.
வாங்குகிற எலக்ட்ரானிக் சாதனத்தின் பின் டேர்ம்ஸ் மற்றும் கன்ஷன்கள் பற்றி கொடுக்கப்பட்டிருக்கும். அதை தெளிவாக படிக்க வேண்டும். குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதை மட்டும் பார்க்காமல், இப்படி பல விவரங்களை பார்த்து அதன் பின் செகன்டுஹேண்டு சாதனங்களை வாங்குவது சிறந்தது.
Source :gizbot