மின்சாரம் சேமிக்க முடியுமா ?
நாம் தினந்தோறும் பயன்படுத்தும் AC வகை மின்சாரத்தை நிலையாக ஓரிடத்தில் சேமிக்க முடியாது. மின் ஆற்றலை வேதி ஆற்றல், நிலை ஆற்றல் முதலிய வேறு ஆற்றல்களாக மாற்றிச் சேமிக்கலாம்.
மின்சாரத்தைப் பாய்ச்சி நீரை, ஆக்ஸிஜனாகவும் ஹைடிரஜனாகவும் பிரித்து, இந்த வேதி வளிமங்களைச் சேமித்து வைக்கலாம். தேவைப்படும்போது, இந்த வளிமங்களை வினை புரிய வைத்து, கிடைக்கும் ஆற்றில் மின்சாரம் பெறலாம்.
மின். ஆற்றலினால் நீரை உயரமான பகுதிக்கு குழாய் மூலம் ஏற்றி, நிலை ஆற்றலாகச் சேமிக்கலாம். தேவைப்படும்போது, இந்த நீரை கீழே ஒட விட்டு நீர் மின்சாரம் பெறலாம்.
மாறாக, DC வகை மின்சாரத்தை கண்டன்சரில் நிலையாகச் சேமித்து வைக்க முடியும்.