மாடி தோட்டம் எந்த கீரைவகைகளை வளர்த்து ஆரம்பிக்கலாம்
மாடி தோட்டம் அமைப்பதன் மூலம் நமது வீடு இயற்கை முறையில் குளிர்ச்சி அடையம் . வெயில் காலங்களில் அதிகமான வேப்பம் தாக்காமல் இருக்கும் . இதன் மூலம் நாம் சுற்றுசூழல் நல்ல காற்றும் , மாலை நேரங்களில் தோட்டத்தில் வேலை செய்வதன் மூலம் நமது மனம் ஒரு வகையான சந்தோசமும் அடையும் .
அனைத்தையும் விட நாம் உண்ணும் உணவு நாமே விளைவித்தது என்கிற பொழுது பயமின்றி உணவை ருசிக்க முடியும். இதன் மூலம் அனைவரின் உடல் நலமும் மேம்படும் .
-
வெந்தயக்கீரை
பலவகையான கீரை வளர்க்கலாம்.அதிலும் முதலில் வெந்தயக்கீரை வளர்த்தால் பத்து நாட்களிலேயே ஆரோக்கியமான வெந்தயக்கீரையை அறுவடை செய்யலாம் என்பதோடு மண்ணும் வளம் பெரும்.
-
பாலக்கீரை
இது ஒரு மாதத்தில் அறுவடைக்கு வரும் கீரை வகை .
-
அரைக்கீரை
அரைகீரையும் ஒரு சத்தான ஒன்று . இதுவும் ஒருமாதத்தில் அறுவை செய்யும் வகையை சேர்ந்த கீரை .
-
பச்சை தண்டுகீரை / சிவப்பு தண்டு கீரை
ஒரு மாதத்தில் அருவிக்க வரும் . இது பல முறை அறுவடை செய்யலாம். மேலும் இதன் மூலம் விதைகள் உற்பத்தியும் செய்து கொள்ளமுடியும்.
-
மேலும் கீரை வகைகள்
பொன்னாங்கண்ணிக் கீரை ,தூதுவளை , வல்லாரை ,பசலைக்கீரை, முருங்கை,கறிவேப்பிலை, கற்றாழை,வெற்றிலை,
துளசி,பிரண்டை,கீழாநெல்லி போன்ற செடி கொடி வகைகளையும் சேர்த்து கொள்ளலாம் .
இதனோடு அந்தப்பருவத்திற்கேற்ப பூச்செடிகள் வளர்க்கலாம். இதன் மூலம் மாடி தோட்டம் இதமான நறுமணத்துடனும் , சுகந்தமான வண்ணமுடனும் இருக்கும் .
மாடி தோட்டம் அமைக்க தோட்டக்கலை துறை அல்லது வேளாண் பல்கலை கழகத்தை அணுகலாம்
நன்றி பயன் உள்ள தகவல் களுக்கு