மறைந்து போன அரைஞாண் கயிறும் கண்டாங்கி சேலையும்…
பட்டா பட்டி டவுசர் போடாத, ஜட்டி போடாத கோவணம் மட்டுமே கட்டிகிட்டு வயக்காட்ல வேலைக்கு போறவங்களுக்கு பயன்படுத்தறதுதான் அரைஞாண் கயிறுன்னு பல பேரு நினைச்சிருப்போம். ஆனா அது கட்றதுல எவ்வளவு அறிவியல் சார்ந்த விஷயம் இருக்குன்னு நம்மள்ல பலபேருக்கு தெரிய வாப்பில்ல.
வேலை செய்யறவங்க பொதுவாக ஆண்கள் தான் கனமான பொருட்களை சுமந்து வேலை செய்வார்கள். அப்படி செய்யும்போது மூச்சு முக்கி வயிறு நன்கு அழுத்தப்பட்ட நிலையை அடையும் அப்பொழுது குடலிறக்கம் ஏற்படலாம். இந்த குடலிறக்க நோய் அதிகமாக ஆண்களுக்கு வருவதையுணர்ந்த நம் தமிழ் அறிஞர்கள், மருத்துவர்கள் ஏன் இந்த நோய் பெண் களுக்கு வருவதில்லை என்பதையும் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் அவர்களுக்கு கிடைத்த ஒரு வியப்பூட்டும் செய்தி என்னவெனில் பெண்கள் பின் கொசுவம் வைத்து கட்டும் கண்டாங்கி சேலை இறுக்கமாக அவர்கள் வயிற்றை சுற்றி பிடித்திருப்பதை உணர்ந்தனர்.
பொதுவாக கிராமங்களில் அல்லது நகர்ப்புறங்களில் கடுமையாக வேலைகள் செய்வோர்கள் இடுப்பில் துண்டையோ, கயிற்றையோ கட்டும் பழக்கம் கொண்டிருந்துள்ளனர். அந்த பழக்கம் பழக பழக வழக்கமாய் அரைஞாண் கயிறாக நின்று விட்டது… அந்த அரைஞாண் கயிறு கூட இப்போது யாரும் பெரும்பாலும் கிராமப்புறங்களில் கட்டுவதில்லை.
நாகரீகத்தை நோக்கி நாம் அனைவரும் நகர்வதன் காரணமாக அறிவியலுக்காகவும் உடல் ஆரோக்கியத் திற்காகவும் ஏற்படுத்திய இந்த செயல்கள் எல்லாம் தற்போது மறைந்து காணாமல் போய்க்கொண்டி இருக்கின்றது.