மனிதனின் மந்திரச் சாவியே – செக்ஸ்தான்!

எந்தெந்த உணவுகளை உட்கொண்டால் மனிதர்களின் பாலியல் உணர்வுகள் அதிகரிக்கும், குறையும் என்று நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

துத்தநாகம்
பாலியல் உணர்வின் ஹீரோ எனப்படுவது துத்தநாகச் சத்துதான். இந்த சத்துள்ள உணவுகளை உட்கொண்டால் பெண்களுக்கு தாம்பத்ய ஆர்வம் அதிகரிக்கும். ஆண்களுக்கு உயிரணுக்கள் வலிமையாகும். உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும். கடல் சிப்பியில் அதிக அளவு துத்தநாகச் சத்து உள்ளது. இதை உண்ண பிடிக்காதவர்கள் சம்பா அரிசி, பச்சை நிற கீரைகள், முழுக் கோதுமை பிரெட் இவற்றை உட்கொள்ளலாம். இவற்றிலெல்லாம் அதிக அளவு துத்தநாகச் சத்து காணப்படுகிறது.

வைட்டமின்கள்
வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் பாலியல் உணர்வுகள் அதிகரிக்குமாம். ஆட்டு ஈரல், முட்டை, பால் பொருட்கள், கேரட் போன்றவைகளை அளவோடு உட்கொள்ளவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.1,000 மில்லி கிராம் வரை வைட்டமின்-சி சத்து உடலில் சேரவேண்டும். இதனால் உயிரணுக்கள் வலிமையடையும். ஆரஞ்சு, திராட்சை, ஸ்ட்ராபெரி, சிட்ரஸ் நிரம்பியுள்ள எலுமிச்சை போன்ற பழங்கள் வைட்டமின்-சி நிறைந்தவை. அவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

செலீனியம் சத்து
உடம்பில் மாங்கனீஸ் குறைந்தால், குழந்தை பெறும் வாய்ப்பும் குறையத் துவங்கும். மாங்கனீஸ் சத்து, உடலின் ஈஸ்ட்ரோஜன் சுரப்புக்கு நல்லது. குறிப்பாக, பெண்களின் தாய்மைபேற்றினை இது ஊக்குவிக்கும். கீரை, முழு கோதுமை, அன்னாசிப் பழம், பீன்ஸ், பட்டாணி, முந்திரி… இவற்றிலெல்லாம் மாங்கனீஸ் சத்து உண்டு அவற்றை உட்கொள்வதன் மூலம் பெண்களின் காதல் உணர்வுகளை அதிகரிக்கச் செய்யலாம்.

‘சொலீனியம்’ சத்து பெண்களின் கரு முட்டை வளர்ச்சிக்கும், ஆண்களின் உயிரணு வளர்ச்சிக்கும் நல்லது. அதிக கொழுப்பற்ற இறைச்சி, சம்பா அரிசி, ஓட்ஸ், முட்டை, வால்நட், முழு கோதுமை இவற்றிலெல்லாம் இந்த சொலீனியம் உண்டு.

ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ்
ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் உணவில் அதிக அளவு இருந்தால், தாம்பத்ய வாழ்வின் திருப்தி நிலைக்கு பயன்படும். பழங்கள், காய்கறிகள் போன்றவற்றில் இவை அதிக அளவில் உண்டு. வெங்காயம், பூண்டு, கேரட், இஞ்சி, காய்ந்த முந்திரி போன்றவை உணவில் இருந்தால் தாம்பத்ய வாழ்க்கை சுகமாகும்.ஆண்களின் உயிர் அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பவர்கள், லினோலிக் ஆசிட் நிரம்பிய உணவுகளைச் சாப்பிட்டால் பலன் கிடைக்கும். முந்திரி, சூரியகாந்தி எண்ணெய், ஆலிவ் ஆயில், சோயா ஆயில் போன்றவற்றில் இது அதிக அளவில் இருக்கிறது.

காபி அதிகம் குடிக்காதீங்க
காலையில் எழுந்து காபி குடிக்காவிட்டால் சிலருக்கு வேலையே ஓடாது. அந்த அளவிற்கு காபிக்கு அடிமையாக கிடப்பார்கள். ஆனால் அதிகம் காபி குடிப்பதால் தாம்பத்ய ஆர்வம் பாதிப்பிற்கு உள்ளாகும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். காஃபின் எனப்படும் ரசாயனம் செக்ஸ் ஹார்மோன்களின் சுரப்பினை குறைத்து செக்ஸ் மீதான ஆர்வத்தை காலி செய்து விடுகிறது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். எனவே இளம் தலைமுறையினர் அதிக அளவில் காபி குடிப்பதையும், காஃபின் நிறைந்த பொருட்களை உட்கொள்வதை தவிர்க்கவேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline