ஒரு ஊர்ல ராஜா இருந்தாராம், அந்த ராஜாவுக்கு மிகவும் பிடித்த திறமைமிக்க.. நம்பிக்கையான மந்திரி இருந்தாராம் அந்த மந்திரிக்கு ராஜா அனைத்து சகல வசதிகலையும் செய்துகொடுத்தாறாம். ஒருநாள் ராஜாவிடம் அந்த மந்திரி நான் சாமியாராக ஆகபோகிறேன் எனக்கு விடைகொடுங்கள் என்று மந்திரி சொன்னவுடன் ராஜா மிகுந்தவருத்ததுடன் வழியனுப்பி வைத்தாராம். 10 ஆண்டுகள் கழித்து அந்த மந்திரி மீண்டும் அவ்வூருக்கு வந்தாராம். இதை கேள்விபட்ட ராஜா அந்த மந்திரியை நேரில் சென்று பார்த்தபோது அந்த மந்திரி நீண்ட தலை முடியுடனும் தாடியுடனும் ஒரு சாதாரன குடிசைவீட்டு தின்னையில் அமர்ந்திருந்தார்.இதை பார்த்த ராஜா மிகுந்த வருத்தத்துடன் இந்த பத்து வருடங்களில் அப்படி என்ன சாதித்தாய் என்று மந்திரியிடம் கேட்டார்..அதற்க்கு மந்திரி சொன்னாராம்.. இதற்க்குமுன் நான் உங்கள் முன் நின்று கொன்டுயிருந்தேன் இப்பொழது நீங்கள் என் முன் நின்றுகொன்டுயிருக்கிரீற்கள்..இதுதான் நான் சாதித்தது என்று சொன்னவுடன் ராஜா மகிழ்ச்சியோடு தன் அரண்மனைக்கு சென்றார்.
//மகிழ்ச்சியென்பது அவர் அவர் எண்னெங்களில்தான் உள்ளது!!