நாம் இன்றைய உணவுகளில் எம்மை அறியாமலே கொழுப்புகள் நிறைந்த வகைகளை விரும்பி உண்கின்றோம்.இதனால் சிறு வயது முதலே தொப்பை உருவாகின்றது இதனை தவிர்ப்பதற்கு பின்வரும் உணவுகளை உண்ணமுடியும் என்று மருத்துவ உலகம் கூறுகின்றது
கருப்பு பீன்ஸ்
பொதுவாக பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் இருக்கும்.
இவற்றை சாப்பிட்டால் பசியே ஏற்படாது. அதிலும கருப்பு பீன்ஸில் அளவுக்கு அதிகமான அளவில் ஃப்ளேவோனாய்டுகள் உள்ளன.
இந்த உணவை அதிகம் சாப்பிட்டால், வயிற்றில் சேரும் கொழுப்புகள் குறையும் என்று ஆய்வுகள் பலவும் கூறுகின்றன. ஆகவே மறக்காமல் இந்த கருப்பு பீன்ஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பேரிக்காய்
பேரிக்காயில் குறைவான அளவில் கலோரி இருப்பதோடு, நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
ஆகவே இந்த பழத்தை தினமும் உணவு சாப்பிடுவதற்கு முன் சாப்பிட்டு, பின்னர் உணவை சாப்பிட்டால், உடல் எடை நிச்சயம் குறையும்.
ஏனெனில் ஆய்வு ஒன்றில் இந்த பழத்தில் நார்ச்சத்துக்கள் மட்டுமின்றி, கேட்டிசின்ஸ் மற்றும் ஃப்ளேவோனாய்டு என்னும் இரண்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
இவை உணவில் இருக்கும் கொழுப்புகள் வயிற்றில் தங்காமல் பார்த்துக் கொள்ளும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் இதனை சாப்பிட்டால் உடல் எடை குறைவதோடு, கொழுப்புகள் சேராமல் இருக்கும்.
வேர்க்கடலை
நட்ஸ் வகைகளில் வேர்க்கடலை மிகவும் சுவையுடன் இருக்கும். அத்தகைய வேர்க்கடலையில் சுவை மட்டும் இருப்பதோடு அதனை சாப்பிட்டால், உடல் எடையும் குறையும்.
ஏனெனில் இதில் என்னதான் கொழுப்புகள் இருந்தாலும் அவை மிகவும் ஆரோக்கியமானவை. மேலும் அவை உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்துவிடும். ஆகவே இதனை எப்படி வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம்.
சூரியகாந்தி விதைகள்
கடைகளில் விற்கப்படும் சூப், சாலட் மற்றும் சாண்ட்விச் போன்றவற்றின் மீது சூரியகாந்தி விதைகள் அழகுக்காகவும், சுவைகாகவும் சேர்க்கப்படுகிறது.
அத்தகைய சூரியகாந்தி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்பான மோனோ-அன்-சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. ஆகவே இவற்றை தொப்பை உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைந்துவிடும்.
வெள்ளை டீ(White Tea)
நாம் இதுவரை கிரீன் டீ மட்டும் தான் உடல் எடையை குறைக்கும் என்று நினைத்துள்ளோம். ஆனால் கிரீன் டீயை விட வெள்ளை டீ உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.
ஏனெனில் அவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருக்கிறது. கிரீன் டீயில் 20 கிராம் காஃப்பைன் இருந்தால், இதில் 15 கிராம் தான் இருக்கிறது.
மேலும் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து இதய நோய் ஏற்படாமல் தடுப்பதோடு, உடல் எடையை குறைப்பதிலும் கிரீன் டீயை விட இது மிகவும் சிறந்தது.
ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகர் சுவைக்காக பல உணவகங்களில் சாலட் மற்றும் பலவற்றில் சேர்க்கப்படுகிறது. அத்தகைய ஆப்பிள் சீடர் வினிகரில் அசிடிக் ஆசிட் இருக்கிறது.
இந்த ஆசிட் உடலில் சென்றால் உடலில் உள்ள கொழுப்புகள் கரைவதோடு, கொழுப்புகள் சேராமலும் தடுக்கும்.
ஆகவே உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க நினைப்பவர்கள், இந்த ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்துக் கொண்டால் நன்மையைப் பெறலாம்.