பேலியோ டயட் சர்க்கரை செக் செய்வது எப்படி

பேலியோ டயட் சர்க்கரை செக் செய்வது எப்படி?

சுகர்
சுகர் பேஷண்டுகள் கண்டிப்பாக மாத்திரையை உடனே நிறுத்தக் கூடாது.
க்ளுக்கோமீட்டர் பக்கத்து மருந்துகடையில் இருந்து வாங்கவும். அவ்வப்போது பேட்டரி சரியாக இருக்கிறதா என செக்செய்யவும்.
பேலியோ டயட் ஆரம்பித்த உடனே சுகரை ரெகுலராக செக் செய்ய வேண்டும்.

தினமும் நான்கு முறை சுகர் பார்க்க வேண்டும்.

1. காலை வெறும் வயிற்றில்-பாஸ்டிங் (தண்ணீர் குடிக்கலாம், வேறு எதுவும் சாப்பிடாமல் செக் செய்ய வேண்டும்)
2. காலை சாப்பிட்ட பின் இரண்டு மணி நேரம் கழித்து-post prandial/PPBS பார்க்க வேண்டும்.
3. மதிய உணவிற்கு முன்-prelunch சுகர் செக் செய்ய வேண்டும்.
4. இரவு உணவிற்கு முன் செக்செய்ய வேண்டும்-pre dinner
இத்துடன் ஏதாவது சீட்டிங் செய்து சுகர் கூடினால், என்ன சாப்பிட்டீர்கள் என்பதை மறக்காமல் எழுதவும். என்றாவது ஹைப்போகிளைசீமியா அதாவது சுகர் குறைந்து வியர்த்து மயக்க நிலை வந்தால், ஐந்தாம் முறையும் சுகர் செய்யவும்.
ஹைப்போகிளைசிமியா வந்தால் தயங்காமல் சிறிது சர்க்கரையை வாயில் போட்டுக் கொள்ளவும். அடுத்த நாள் அல்லது முடிந்தால் அன்றே டாக்டரைப் பார்த்து மருந்தை குறைக்கவும்.
இதை ஒரு சார்ட்டாக ரெடி செய்யவும். வாரம் ஒரு முறை இந்த சார்ட்டை அருகிலிருக்கும் அல்லது உங்கள் குடும்ப மருத்துவரிடம் எடுத்து சென்று சுகர் மாத்திரைகளை குறையுங்கள். சுத்தமாக சுகர் மாத்திரைகளை நிறுத்தும் வரை தினமும் நான்கு முறை பார்க்க வேண்டும்.
சிலருக்கு பத்தே நாளில் சுகர் மறைந்து விடும். சிலருக்கு சுகர் மறைய 54வாரங்கள் கூட ஆகலாம்.
சுகரை இல்லாமல் ஆக்கி வெற்றி கண்ட பிறகு மறுபடி காமன் மேன் டயட் ஆரம்பித்தால், சுகர் மீண்டும் வரும்.
மேலே சொன்ன அனைத்தும் இரண்டாம் வகை சர்க்கரை வியாதிக்கு மட்டுமே பொருந்தும். (அதாவது உங்களுக்கு சர்க்கரை வியாதி வந்து முதலில் மாத்திரை ஆரம்பித்து ஓரளவிற்கு கண்ட்ரோலில் இருந்தால், உங்களுக்கு இருப்பது இரண்டாம் வகை சுகர்)டைப் ஒன்று சுகர் இருப்பவர்கள்,
டயட்டில் இருந்து இன்சுலின் எடுக்கும் அளவைக் குறைக்கலாம். முற்றிலும் குணப்படுத்த முடியாது. (டைப் ஒன்று என்றால் சின்ன வயதிலேயே சுகர் வந்து, மாத்திரை கொடுத்து கண்ட்ரோல் ஆகாமல், வெறும் இன்சுலின் ஊசி மட்டுமே போடுகிறீர்கள் என்றால் உங்களுக்கு டைப் ஒன்று என்று பொருள். இது மிக அரிய வியாதியாகும். 95% டயாபெடிஸ் மக்கள் இரண்டாம் வகையினரே)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline