பெண் குழந்தை அன்பு
திருமணம் செய்துக்கொண்ட ஒரு ஆணும் பெண்ணும் வீட்டில் தனியாக (கொஞ்சி) விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மனைவி சொன்னாள் யார் வந்து கதவை தட்டினாலும் திறக்க கூடாது என்று. கணவனும் சரி என்றான்.
சிறிது நேரத்திற்கு பிறகு கணவனின் தாயார் வந்து கதவை தட்டினார். இவன் படுக்கையிலிருந்து எழுந்து ஜன்னலில் எட்டி பார்த்தும் மனைவியும் பார்த்தான். கதவை திறந்தால் கொண்ணுடுவேன் என்பது போல் அவள் முறைத்தாள். சரி வீட்டில் யாரும் இல்லை போல என்று நினைத்து தாயார் சென்றுவிடுகிறார்.
மறுபடியும் சிறிது நேரம் கழித்து கதவு தட்டும் சத்தம். இந்த முறை மனைவி எழுந்து கணவனை போல் ஜன்னலில் எட்டிப் பார்த்தால். தன் மகளை பார்க்க கையில் திண்பண்டத்துடன் காத்திருக்கிறார் அவளின் தந்தை. ஆனால் இவளோ கதவு அருகே நின்று அழுதுக் கொண்டிருக்கிறாள்.
பெண்கள் அழுவது எந்த ஒரு நல்ல ஆண்களுக்கும் பிடிக்காது. ஏன் எதற்காக அழுகிறாய் என்று கணவன் அதட்டி கேட்க அப்பா!!! என்று கை நீட்டி அவன் தோளில் சாய்ந்து இன்னும் சத்தமாக அழுகிறாள்.
மெதுவாக சிரித்த கணவன் சரி கதவை திற என்கிறான். அவனை பிடித்து இழுத்து அவன் முகத்தில் ஆசையாக முத்த மழை பொழிந்து கதவை திறக்கிறாள் மனைவி. மாதங்கள் பல ஓடின.
முதல் குழந்தை ஆண் குழந்தையாகவும் 2வது குழந்தை பெண் குழந்தையாகவும் பிறந்தது. பெண் குழந்தை பிறந்த அன்று நன்பர்களையும் ஊர் மக்களையும் உறவினர்களையும் அழைத்து பெரும் செலவில் விருந்து வைத்தான். இதை பார்த்த மனைவி ஏன் ஆண் குழந்தைக்கு மட்டும் விருந்து வைக்கவில்லை!!! என்றாள். அவள் கையை பிடித்துக் கொண்ட கணவன். நான் வீட்டிற்கு வந்தால் முதலில் பெண் குழந்தைதான் கதவை திறக்கும் என்று கண் கசிகிறான்.
அன்று அவள் செய்த தவறை நினைத்து என்னை மன்னிக்கவும் கணவன்க சொல்ல அவள் வேக வேகமாக கண்ணீரை துடைத்துக் கொண்டு நான் அழமாட்டேன்டா! செல்லம்!!! என்று கணவனை கொஞ்சுகிறாள். இவர்கள் கொஞ்சி காதல் செய்வதை பார்த்த நண்பர்கள் அத்தனை பேரும் கைத் தட்டி விசிலடித்தனர்.
பெண்கள் பிறவிலேயே இரக்கமும் தாய்மையும் கொண்டவர்கள் ஆனால் ஆண்கள் எப்போதுமே பெண்களை நேசிப்பவர்களாய் தான் இருக்கின்றனர். இதை பெண்கள் புரிந்துக் கொண்டாள் இங்கேயே நமக்கு சொர்கம் தான் நண்பர்களே