புறா வளர்ப்பு 50 ஜோடிகளுக்கு வரவு செலவு

புறா வளர்ப்பு 50 ஜோடிகளுக்கு வரவு செலவு

10 அடி நீளம்,6 அடி அகலம், 6 அடி உயரத்தில்,ஓர் அறையை கட்டவேண்டும்.செம்மண் அல்லது சுக்கான் மண்ணை சுவர் எழுப்ப பயன்படுத்த வேண்டும். சுவரில் மண்பானைகளை நெருக்கமாக வைத்து அதன் வாய் பகுதி அறையின் உள் பக்கமாக இருக்கவேண்டும்.வாசலுக்கான இடைவெளி தவிர வேறு இடைவெளிகள் இருக்ககூடாது. வசதிக்கேற்ப கூரையை அமைக்க ஓலை,கான்கிரிட் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சுவரில் பதிக்கப்பட்ட மண் பானையில் ஜோடிஜோடியாக புறாக்கள் அடைந்துக்கொள்ளும். பெண் புறா இரண்டு முட்டையிட்டவுடன் அடைக்கு உட்கார்ந்து விடும். முட்டையை கையால் தொடக்கூடாது. தொட்டால் முட்டைகள் பொறிக்காது. பெண் புறா அடை படுத்தவுடன் ஆண் புறா வேறு பானைக்கு மாறிவிடும். 28 ஆம் நாளில் குஞ்சுகள் பொரிக்கும்.15 நாட்கள் முடிந்துடன் குஞ்சுகளை தனியே பிரித்துவிடவேண்டும்.

30 நாட்கள் முடிந்த உடன் மீண்டும் பெண் புறா முட்டையிட தொடங்கும். ஓராண்டில் 10 குஞ்சுகள் வரை கிடைக்கும்.

25 நாளாகிய குஞ்சுகள் ஜோடி 10௦0 ரூபாய்வரை விற்பனையாகிறது. ஒரு ஜோடி புறா மூலம் 1000 ரூபாய் கிடைக்கும்.50 ஜோடிகள் வளர்த்தால் ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

முதலீடு: ஒரு ஜோடிபுறா 60 ரூபாய் வீதம் 50 ஜோடிகளுக்கு 3000 ரூபாய். அறை கட்டுவதற்கு 10 ஆயிரம் ரூபாய் செலவாகும். முதலீடு 13ஆயிரம். வருமானம் 50 ஆயிரம். லாபம் 37 ஆயிரம். தீவன செலவு மழை காலங்களில் மட்டுமே.

14 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *