புரதச்சத்து மிக்க உலர்தீவனம் நிலக்கடலை செடி 

19027_539659319402374_1253890731_n

உலர் தீவனங்களில், புரதச்சத்துக்கள் நிரம்பிய, நிலக்கடலை செடியை, கால்நடைகளுக்கு கொடுப்பதால், சத்துக்கள் கிடைப்பதோடு, தீவனங்கள் வாங்க செலவாகும் பெருந்தொகையை குறைக்கலாம் என, கால்நடைத்துறை பரிந்துரைத்துள்ளது.

கால்நடைகள், உலர் தீவனங்களை விரும்பி சாப்பிடாது. இதில், குறைந்த புரதச்சத்துகள் இருப்பதோடு, எளிதில் செரிப்பதால், பால் உற்பத்தி குறைவதோடு, உடல் வளர்ச்சி தாமதப்படும்.

இதற்காக, அதிக விலை கொடுத்து, அடர் தீவனங்கள் வாங்க வேண்டியிருக்கும். பாலின் விலை அதிகமாவதற்கு, தீவனச் செலவும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில், உலர் தீவனங்களின் சத்துக்களை தரம் காணும் சோதனை நடத்தப்பட்டது. இதில், மற்ற வகை தீவனங்களை காட்டிலும், கடலைச்செடியில், புரதம் மற்றும் கொழுப்பு சத்துகள் நிரம்பி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

கால்நடை பல்கலை பேராசிரியர் ஒருவர் கூறுகையில், ‘கடலையை பிரித்தெடுத்த பின் சேகரமாகும் செடியை, காலை, மாலை வேளைகளில் உலர்த்தி, ஈரமில்லா இடத்தில் வைப்பது நல்லது. ஏனெனில், ஈரப்பதம் இருப்பின், எளிதில் காளான் நச்சு தொற்று, செரிமான பிரச்னையை ஏற்படுத்தும்.

இதை, நிலங்களில் பயிரிட்ட விவசாயிகள், தங்களது கால்நடை களுக்கு பிரத்யேகமாக உலர் தீவனங்களை, விலைக்கு வாங்க வேண்டிய அவசியமில்லை. கொட்டில் முறையில் வளர்க்கும் ஆடுகளுக்கு, எவ்வித அடர்தீவனமும் கொடுக்காமல், நிலக்கடலை செடியை கொடுத்தே, ஆரோக்கியமாக வளர்க்க முடியும்,” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline