புதிய கார் வாங்கப் போறிர்களா? எப்படி வாங்கலாம்

பொதுவாக புதிய வாகனங்களை வாங்கும்போது முதல் 1,000 கிலோமீட்டருக்கு மிதமான வேகத்தில் ஓட்டுவதற்கு தயாரிப்பாளர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனை ரன்னிங் இன் பீரியட் என்று கூறுகின்றனர். தயாரிப்பாளர்கள் முதல் 1,000 கிமீ தூரத்தை ரன்னிங் இன் பீரியடாக கொடுக்கின்றனர். ஆனால், 2,500 கிலோமீட்டர் தூரம் வரை மிதமான வேகத்தில் ஓட்டுவது சாலச்சிறந்தது.எஞ்சின் சிறப்பாக செயல்பட உதவுவது மட்டுமின்றி தயாரிப்பு நிலைகளில் ஏற்படும் குறைகளால் சில கசப்பான அனுபவங்களை தவிர்க்க உதவும்.

எஞ்சின் சிறப்பாக இயங்குவதற்கு சிறிது அவகாசம் தேவை. புதிய எஞ்சின்களில் தயாரிப்பு நிலைகளில் சிறு குறைபாடுகள் இருக்க வாய்ப்பு உண்டு. சிலிண்டருக்குள் பிஸ்டன்கள் சரியாக பொருந்தி மேலும், கீழும் ஸ்மூத்தாக இயங்க வேண்டும். பிஸ்டன் இயங்கும்போது அதன் ரிங்குகள் சிலிண்டர் சுவருடன் ஏற்படும் உராய்வு ஆயில் மூலம் குறைக்கப்பட வேண்டும். இது செட் ஆவதற்கு சிறிது காலம் பிடிக்கும். இதில் ஏற்படும் குறைபாடுகளால்தான் சில கார்கள் வாங்கியவுடன் மைலேஜும் கொடுக்காது; சிறந்த பெர்ஃபார்மென்ஸும் இருக்காது.

எனவே, மிதமான வேகத்தில் ஓட்டும்போது கொஞ்சம் கொஞ்சமாக இந்த பிரச்ச‌னைகள் சரியாகும். இதனாலேயே, முதல் சர்வீஸ் செய்த பின்னர் கார்கள் அதிக மைலேஜ் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் தருவதற்கு காரணம்.

இது எஞ்சினுக்கு மட்டுமல்ல, கியர் பாக்ஸ், பிரேக்கிங் சிஸ்டம், பேரிங்குகள், டயர்கள் என அனைத்தும் செட்டிலாக கொஞ்ச காலம் பிடிக்கும். எனவே, ரன்னிங் இன் பீரியடில் காரை மிதமாக ஓட்ட வேண்டியது அவசியம்.

எஞ்சின் வார்ம் அப்:

காரை ஸ்டார்ட் செய்தவுடன் நகர்த்த வேண்டாம். எஞ்சினை 2 நிமிடங்கள் ஐட்லிங்கில் வைக்க வேண்டும். இதேபோன்று, எஞ்சினை ஆன் செய்த அடுத்த கணமே ஏசியை ஆன் செய்யாதீர்கள். கார் நகர்ந்து 2000 முதல் 2500 ஆர்பிஎம்மில் செல்லும்போது மட்டுமே ஏசியை ஆன் செய்ய வேண்டும். எடுத்தவுடன் காருக்கு கூடுதல் சுமையை கொடுக்க வேண்டாம்.

கியர் மாற்றுவது எப்படி?

சீரான வேகத்தில் செல்வது மட்டுமின்றி எஞ்சின் திணற விடாத வகையில் கியர் மாற்ற வேண்டும். 10 கிமீ வேகத்தில் இரண்டாவது கியரையும், 20 கிமீ வேகத்தை எட்டும்போது 2 வது கியரையும், 30 கிமீ வேகத்தில் 3 வது கியரையும், 40 கிமீ வேகத்தில் 4 வது கியரையும் மாற்றவும்.

வேகம்:

கார் வாங்கி முதல் 2500 கிமீ தூரம் வரையிலும் 100 கிமீ வேகத்துக்கு மேல் செல்ல வேண்டாம். ரன்னிங் பீரியடை தாண்டியவுடன் கொஞ்சம் கொஞ்சமாக 100 கிமீ வேகத்துக்கு மேல் செல்லலாம்.

பிரேக்கை கையாள்வது எப்படி?

எஞ்சின் போன்றே பிரேக்குகளும் செட் ஆவதற்கு சிறிது காலம் பிடிக்கும். எனவே, பிரேக்குகளையும் மென்மையாக கையாள்வது சிறந்தது. அடிக்கடி சடன் பிரேக் அடிப்பதை தவிர்க்க வேண்டும். மிதமான வேகத்தில் செல்லும்போது கண்டிப்பாக சடன் பிரேக் அடிப்பதை தவிர்க்க முடியும்.

எஞ்சின் ஆஃப்:

காரை பார்க்கிங் செய்தவுடனேயே எஞ்சினை நிறுத்தி விட வேண்டாம். 30 வினாடிகள் எஞ்சினை ஐட்லிங்கில் வைத்து ஆஃப் செய்ய வேண்டு்ம். ரன்னிங் இன் பீரியட் மட்டுமல்ல, எப்போதுமே இதுபோன்று நிறுத்துவது சிறந்தது. டீசல் எஞ்சின் கார்களுக்கு இது மிக அவசியம்.

ஆயில் சேஞ்ச்:

முதல் 1,000 கிமீ எஞ்சின் ஆயில் மாற்றுவது மிக சிறப்பானது. தயாரிப்பு நிலைகளில் எஞ்சினில் இருக்கும் தூசிகள், சிறு துரும்புகள் ஆகியவை வெளியேறுவதற்கு இது மிக அவசியம். அடுத்ததாக தயாரிப்பாளர் பரிந்துரைக்கப்பட்ட கால அளவைவிட சிறிது முன்கூட்டியே மாற்றுவதும் நல்ல விஷயமே.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.