பீஜாமிர்தம் எப்படி தயாரிப்பது?

பீஜாமிர்தம் எப்படி தயாரிப்பது?

தேவையான பொருட்கள்

தண்ணீர் 20 லிட்டர்,
பசு மாட்டு சாணி 5 கிலோ,
கோமியம் 5 லிட்டர்,
சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம்,
மண் ஒரு கைப்பிடி அளவு.

தயாரிக்கும் முறை
தண்ணீர் 20 லிட்டர்,பசு மாட்டு சாணி 5 கிலோ,கோமியம் 5 லிட்டர்,சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம்,மண் ஒரு கைப்பிடி அளவு.இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நன்றாக ஊற விடவேண்டும். இதுதான் பீஜாமிர்தம்.

பீஜாமிர்தம் எப்படி பயன்படுத்துவது?
விதை நேர்த்தி செய்ய விதிகளை இந்த கரைசலில் 2 மணி நேரம் ஊற விட வேண்டும். நாற்றுகளாக இருந்தால் அதன் வேர்களை நன்றாக நனையவிட்டு பிறகு நடவு செய்ய வேண்டும்.

பீஜாமிர்தம் நன்மை என்ன?
1.வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படும்.
2 எல்லா வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline