பழைய கிணத்துக்குள்ள இறங்கினப்போ, விஷ வாயு தாக்கி ஒருத்தர் இறந்துட்டார்’ங்கிற மாதிரியான செய்தி, அப்பப்போ நம்ம காதுல விழறது வாடிக்கையா இருக்கு. குறிப்பா, இந்த மாதிரி சம்பவங்கள் நகர்ப்புறங்கள்லதான் அதிகமா நடக்கும். கிராமப்பகுதியில பெரும்பாலும், இப்படி சம்பவம் நடக்காது. அதுக்குக் காரணம், நம்ம முன்னோர்கள் கையாண்ட வழிமுறைகளை, இன்னமும் கிராமங்கள்ல கடைபிடிக்கறதுதான்.
காத்தோட்டம் இல்லாத கிணறு, நெல் சேமிச்சி வெக்கிற குதிர் இதுலயெல்லாம் மீத்தேன்… மாதிரியான விஷ வாயுங்க உருவாகி இருக்கும். முன்னெச்சரிக்கை இல்லாம கிணத்துக்குள்ளயோ, குதிர்குள்ளயோ இறங்கினா, பிராண வாயு கிடைக்காம மூச்சுத்திணறல்தான் வரும். அப்படிப்பட்ட கிணறுகள்ல இறங்குறதுக்கு முன்ன.. பெரிய அகல் விளக்கை நல்லெண்ணெய் ஊத்தி எரிய வெச்சு, கயிறு மூலமா அதை கிணத்துக்குள்ள இறக்கணும். விளக்கு எரியுறதுக்கு பிராண வாயு தேவை. அந்த வாயு கம்மியா இருந்தா… உள்ள இறக்குற விளக்கு ‘பட்’னு அணைஞ்சுடும். இப்படி ரெண்டு, மூணு தடவை, முயற்சி பண்ணி… லேசா ஆட்டிக்கிட்டே விளக்கை உள்ளுக்குள்ள இறக்கினா… பிராண வாயு உள்ள போக ஆரம்பிச்சு, விளக்கு அணையாம எரிய ஆரம்பிக்கும். உள்ள இருக்குற விஷ வாயுக்களும் சேர்ந்து எரிஞ்சுடும். விஷ வாயு முழுக்க எரிஞ்சுடுச்சுனா… விளக்கு சுடர்விட்டு எரிய ஆரம்பிச்சுடும்.
இதுக்குப் பிறகு, தைரியமா கிணத்துக்குள்ள இறங்கலாம். இப்பவும், சேலம், தர்மபுரி பக்கமெல்லாம், இந்தப் பழக்கம் இருக்கு. இதை அக்கம்பக்கமிருக்கிறவங்கிட்ட சொல்லி வெச்சா, பல உயிர்களைக் காப்பாற்றலாம்தானே!
Thanks : Kalyan Sundar- FB
வேதியியல்/இயற்பியலில் படித்த விஷயங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன..அப்போது புரியாவிட்டாலும் இப்போது புரிந்து விட்டது…