பருவநிலை மாற்றம் – PART -2

பருவ நிலை மாற்றம் — என்னுடைய புரிதல்
சூரிய வெப்பம் பூமிக்கு வந்தவுடன் கடலும், நிலமும் சிறிது வெப்பத்தை உள்வாங்கி கொள்கின்றன, மீதி வெப்பம் அண்ட வெளிக்கே திரும்பி செல்கிறது. இது தான் 200 வருடங்கள் முன் நடைமுறைகாடுகள் அழிக்கபட்டு, நிலக்கரி, கச்சா எண்ணை எரிக்க பட்டவுடன் கீழே உள்ள வாயுக்களின் விகிதாச்சாரம் வளி மண்டலத்தில் அதிகம் ஆகியது. இந்த வாயுக்கள் (green house gases) வெப்பத்தை உள்வாங்கி மெதுவாக எல்லா திசைகளிலும் வெளிபடுத்தும் தன்மை கொண்டவை.

பருவநிலை மாற்றம் – PART -2

இந்த வாயுக்கள் சூரிய வெப்பத்தை நீண்ட நேரம் தக்கவைத்து பிறகு வெளிபடுத்துவதால் வளியின் வெப்பம் தொடர்ந்து அதிகரிக்கிறது. இந்த வெப்பம் மீண்டும் கடலால் உள்வாங்க படுகிறது.

கடல் வெப்பம் அதிகரிப்பு: நீர் விரிவடைகிறது, கடல் நீரோட்டம் மாறுகிறது, பனி பாறைகள் உருகுகின்றன, அதிக நீராவி உற்பத்தி, கடல் மட்டம் உயர்வு.

காற்றின் வெப்பம்: அதிக மழை அல்லது அதிக வறட்சி. பலத்த காற்று. காணாமல் போகும் ஈரப்பதம்.

நிலத்தின் வெப்பம்: வறட்சி, காணாமல் போகும் நுண்ணுயிர்கள், கருகும் செடிகள், குறையும் உணவு உற்பத்தி, குறையும் இன பெருக்கம், இல்லாத நிலத்தடி நீர்மட்டம்.

இவை எல்லாமே சங்கிலி வளையம் போல பின்னபட்டு உள்ளன. சில ஆண்டுகள் வரை கட்டுக்குள் இருந்த வெப்பம் இப்போது பல வேடங்களில் வெளி வந்து கொண்டே இருக்கிறது. இந்த வெப்பம் அல்லது சக்தியின் ஆற்றல் முற்றிலும் குறைந்த பிறகே விளைவுகள் நிற்கும். அது வரை…..ஆட்டம் தொடரும்.

பருவநிலை மாற்றம் – PART -2

மாற்று சக்தி: இந்த சக்தியை உருவாக்க இன்னும் நிறைய எரிக்க வேண்டும். உதாரணம் — மின்சார டர்பைன் ( இரும்பை உருக்க வேண்டும்), சோலார் பேனல் — கச்சா எண்ணை, ரசாயனங்கள்

கார்பன் டை ஆக்ஸைடு — தொழில் புரட்சியின் பரிசு

நைட்ரஸ் ஆக்ஸைடு — நிலக்கரி எரிப்பு, ரசாயன உரம், மரங்கள் எரிப்பு, அனைத்து இயந்திரங்களும் ( Internal combustion engines)

மீத்தேன் — கச்சா எண்ணை எடுத்தல், குப்பை மேடுகள், தொழில் முறை விவசாயம், கால்நடை வளர்ப்பு.

CFC — ஏசி, பிரிட்ஜ் இருந்து வரும் வாயு.

நன்றி :   Prakash Thangavel

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline