பஞ்சாங்கத்தின் விளக்கங்கள்
சந்திரனும், சனியும் பூமிக்கு எதிரெதிராக இருக்கும் சமயம் இந்த நாளில் விதைப்பது, நடவு செய்வது சிறந்தது. கொம்பு சிலிக்கா உரம் தெளிக்கலாம்
கீழ் நோக்கு நாட்களில் செய்ய வேண்டியன
பூமிக்கு கீழே விளையும் பயிர்களின் விதைப்பு நடவு, அறுவடை செய்தல் கம்போஸ்ட் தயாரிப்பு துவக்குதல் மற்றும் நிலத்திற்கு குப்பை இடுதல், கொம்பு சாண உரம் தெளித்தல், கவாத்து செய்தல், மரம் வெட்டுதல், மரக்கன்று நடுதல், உழவு அடித்தல் போன்றவை செய்யலாம்.
மேல் நோக்கு நாட்களில் செய்ய வேண்டியன
கொம்பு சிலிகா உரம் தெளிக்கலாம்
ஒட்டு கட்டுதல், பதியம் போடுதல்
பூமிக்கு மேல் விளையும் பயிர் விதைப்பு, அறுவடை, சேமித்தல், திரவ உரம் போன்றவை தெளிக்கலாம்;.
பௌர்ணமி மற்றும் பௌர்ணமிக்கு 48 மணி நேரம் முன்பு
திரவ உரம் பயிருக்கு இலை வழி கொடுத்தல்
மண்ணில் திரவ மருந்து தெளித்தல்
கால்நடைகளக்கு குடற்புழு நீக்க மருந்து கொடுத்தல்
அமாவாசையில்
அமாவாசைக்கு 48 மணி நேரம் முன்பு விதைப்பு செய்தல், தேய்பிறையில் அல்லது அமாவாசையில் மரம் வெட்டலாம்.;
நட்சத்திரம் ராசி பார்த்து விதைத்தல்
விதைக்காக, பழத்திற்காக, வேர்க் கிழங்;கிற்காக, பூக்களுக்காக விதைக்கப்படும் பயிர்களை அட்டவணையில் அந்தந்ததற்கு குறிப்பிட்ட நாளில் விதைக்க வேண்டும். மற்றும் அறுவடை செய்ய வேண்டும்.
சந்திரன் ஒவ்வொரு ராசி மண்டலத்தையும் சுற்றி வரும் சமயம் எந்த ராசிப் பக்கம் வந்து கொண்டிருக்கிறதோ அந்த ராசியின் குணத்தை பூமிக்கும் உதாரணமாக கன்னி ராசியின் பக்கம் வரும் சமயம் மண் குணத்தைக் காட்டுமாதலால் அதனுடன் தொடர்பு கொண்ட வேர் கிழங்கிற்காக அறுவடை செய்யப்படும். சர்க்கரை வள்ளிக் கிழங்;கை நடவு செய்யலாம். படத்திலுள்ள 4 குணங்களுக்கு (காற்று, மண், வெப்பம், நீர்) தொடர்புள்ள இராசி நாட்களில் அந்தந்த குணம் கொண்ட பயிரை விதைக்கலாம்
பூமிக்கு அருகில் உள்ள நிலா நாள் -விதைப்பதைத் தவிர்க் வேண்டும்
பூமிக்குத் தொலைவில் உள்ள நிலா நாள்
விதைப்பது நல்லது
சந்திரன் பாதையும் சூரியன் பாதையும் குறுக்கிடும் நாட்களில்
அஷ்டமி நாளன்று எல்லா விவசாய வேலைகளையும் தவிர்க வேண்டும்.
Thanks to : RSGA