நோய் அணுகா நெறி

வாழ்வில் நோய் அணுகா நெறி

1929843_1069413156413689_3722146099725914400_n

திண்ண இரண்டுவளே சிக்க அடக்காமல்
பெண்ணின் பால் ஒன்றைப் பெருக்காமல் உண்ணுங்கால்
நீர் சுருக்கி மோர் பெருக்கி நெய் உருக்கி
உண்பவர்தம் பேரை உரைக்கில் போமே பிணி.

பாலுண்போம் எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம்
பகலில் புணரோம் பகலில் துயிலோம் பயோதரமும் மூத்த
வேலஞ்சேர் குழலியரோடு இளவெயிலும் விரும்போம்
இரண்டு அடக்கோம் ஒன்றை விடோம் இடது கையில்படு

மூலஞ்சேர் கறி நுகரோம் மூத்த தயிர் உண்போம்
முதல் நாளில் கறி அமுதெனினும் உண்ணோம்
ஞாலந்தான் வந்திடினும் பசி ஒழிய உண்ணோம்
நமனார்க்கு இங்கே ஏது இவை நாமிருக்கும் இடத்தே

 

கி.பி. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த “பதார்த்த குண சிந்தாமணி” என்ற நூலில் தேரையரால் ஒவ்வொருவரும் தன் உடலில் நோய் அணுகாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் தெளிவாய்க் கூறப்பட்டுள்ளன.

1.பசும் பால் அருந்த வேண்டும் (One should drink cow’s milk).

2.வெந்நீரில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் (One should take oil bath in warm water).

3.இடது கையை தலைக்கு கீழே வைத்து படுக்க வேண்டும் (While sleeping, left hand should be under the head).

4.புளித்த தயிரையே உண்ண வேண்டும் (One should consume only sour curd).

5.தினமும் இருவேளை மட்டுமே உண்ண வேண்டும் (One should eat only twice a day).

6.மனைவியுடன் மாதமொருமுறை மட்டுமே சேர வேண்டும் (Only once in a month, one should have sex with his wife).

7.உணவு உண்டவுடன் இறுதியில் மட்டுமே நீரருந்த வேண்டும் (After taking food, one should drink water only at the end).

8.கருணைக்கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் (One should take ‘karunai tuber’ in one’s food).

9.உணவு உண்டவுடன் குறுநடை கொள்ள வேண்டும் (After taking food, one should go for a short strahl).

10.ஆறு மாதத்திற்கொருமுறை நசியம் செய்ய வேண்டும் (Once every six months one should perform ‘nasyam’).

11.1 ½ மாதத்திற்கொருமுறை நசியம் செய்ய வேண்டும் (Once in every 1 1/2 months one should perform ‘nasyam’).

12.1 மாதத்தில் 4 முறை சவரஞ்செய்து கொள்ள வேண்டும் (One should shave 4 times a month).

13.3 நாட்களுக்கு ஒரு முறை அஞ்சனமிட வேண்டும்.

14.இரவில் மர நிழலில் தங்கினால் கெடுதல் உண்டாகும் (One should refrain from staying under the shade of a tree, which is harmful).

15.பசுவையும், தெய்வத்தையும், ஆசிரியரையும் மாலைக்காலத்தில் பூஜிக்க வேண்டும் During the evenings, one should worship the cow, the Almighty and one’s teacher).

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline