நீங்கள் விவாசாயிகளைப் பார்த்து அனுதாபப்படுபவரா ???
இன்று விவசாயி செய்யும் வேலைகளின் வேலைப்
பழுவைப் பார்த்து சொகுசாக வாழும் பலரும்
விவசாயிகளின் மேல் அனுதாபப்படுவதுண்டு.
சொகுசாக வாழ்பவரை விட விவசாயிகளே,
நிம்மதியாக வாழ்கிறார்கள்
என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
உடலின் மிக அவசியமான தேவைகளான உணவு,தூக்கம்
இரண்டையும் நிம்மதியாக
ரசித்து ருசித்து அனுபவிப்பவர்கள் உண்மைகள்
விவாசாயிகள் தான்.
இன்று சொகுசாக வாழ்பவர்கள் ஏதோ நேரம் வந்துவிட்டது என்ற உணர்வு தூண்டப்படுவதனாலேயே தூங்குகிறார்கள்,உண்ணுகிறார்கள் என்பது யாரும் மறுத்துரைக்க முடியாத ஓர் மாபெரும் உண்மை.
மாறாக உண்ண வேண்டும்,தூங்க வேண்டும் என்ற
தேவை உணரப்படுவதால் தூங்குவதோ,
உண்ணுவதோ இல்லை.
தேவை உணரப்படும் போது தான் கேள்விக்கான
பொருளின் மதிப்பே உணரப்படும்.
ஆனால் விவாசாயி ஒருவர் தான் கடின வேலைகளை செய்யும் போது தூக்கம் ,உணவு போன்றவன்றின் தேவைகள் விவாசாயிக்கு உணரப்படுகின்றன.
எனவே இங்கே விவசாயிடம் தான் தேவை உணரப்படுகிறது.
பஞ்சு மெத்தைகளும்,குளிரூட்டப்பட்ட அறைகளும்
ஒரு போதும் தூக்கத்தை தராது.
சொகுசு என்று இவனிடம் இருப்பவைகள் இவைகள்
தானே!
தூக்கம் என்ற தேவை தோற்றுவிக்கப்படும் போது தான்
தூக்கம் வரும்.
இன்றைய சொகுசாக வாழ்பவர்கள் கஸ்டப்பட்டு பல முறை முயன்று அங்கும் இங்கும்
புரண்டு படுத்து தன்னை வருத்தி தூக்கத்தை
வரவழைத்துக்கொள்கிறார்கள்.
ஆனால் விவாசாயிற்கு அவ்வாறல்ல.
தூக்கம் என்ற தேவை உணரப்பட்டதால்
கட்டாந் தரையில் பாய் போட்டு முள்ளந்
தண்டை நிமிர்த்தி தூங்கினாலே தூக்கம்
சென்று விடும்.
தூங்கி எழுந்தால் ஒரு நிம்மதி கிடைக்கும்.அதை வார்த்தைகளால் வர்ணித்திட இயலாது.
இந்த
நிம்மதி சொகுசாய்
வாழ்பவருக்கு கிடைத்து விடாது.
மேலும்
எவ்வளவு தான் வசதி படைத்தோர் புரியாணி,பிறைட்
றைஸ் அல்ல அதற்கு மேல் எது உண்டாலும் அவர்கள்
சொகுசுகளால் சக்தி இழக்கப்படாததன் வாயிலாக
பசி என்ற பாக்கியம் அவர்களிடம் தோற்றுவிக்கப்படாது.
ஏதோ மாடு வைக்கோலை
சாப்பிடுவது போன்றே சாப்பிடுவார்கள்.
ஆனால் விவசாயின் வேலைப் பழுக்கல் காரணமாய்
சக்தி இழக்கப்பட்டு பசியால் உணவின் தேவை உணரப்படும்.
கேள்வி இருப்பதால் பச்சை மிளகாயையும் உப்பு நீரையும் சோற்றுடன் கலந்து சாப்பிட்டாலே அதன் இன்பமே தனியாக இருக்கும்.
பச்சை மறக்கறிகளையே இன்றைய சொகுசாய்
வாழ்பவர்கள் கண்டிருக்க மாட்டார்கள்.
பிரிஜ் கறிகளையே பூட்டாய் பயன்படுத்துவார்கள் இந்த
சொகுதி வாழ்க்கைக்காறர்கள்.
ஆனால் விவசாயியோ தானே உற்பத்தி செய்த
மறக்கறிகளை பிறஸ்ஸாய் உட் கொள்வான்.
இத்தனையும் அனுபவிக்கும் இவனா துரப்பாக்கியவாதி ????/?
விவசாயி பாக்கியம் பெற்றவனே!
நன்றி : Mythish Tup