அறுவடைக்குப் பின் நமது நிலத்தை எவ்வாறு பராமரிக்க வேண்டும்
- அறுவடை செய்த பின்பு நாம் நிலத்தை நன்கு உழுது, அதில் பலதானிய விதைப்பு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மண் வளம் பாதுகாக்கப்படும்.அவ்வாறு விதைக்கப்பட்ட பல தானியச் செடிகளை தாவரங்களை பூ பூக்கும் தருணத்தில் ரோட்டவேட்டர் என்ற கருவியை கொண்டு, நிலத்தை உழுது நிலத்திற்கு தேவையான மண்வளத்தை பாதுகாக்க முடியும்.
- பயிர் சுழற்சி முறையில் பயிர் இடுவதன் மூலமும் நிலத்தின் வளத்தை மேம்படுத்த முடியும்.
- இரண்டு அல்லது மூன்று போகம் விளைச்சல் கொடுக்கும் நிலங்களில், ஒரு போகம் நிலத்தை தரிசாக போடுவதும் நிலத்தின் வளத்தை மேம்படுத்தும்.
- ஆடு ,மாடு போன்றவற்றை நமது நிலத்தில் கிடை போடுவதன் மூலமும் நிலத்தின் வளத்தை அதிகரிக்க முடியும்.
- ஊட்டமேற்றிய தொழு உரம் அல்லது நமது பண்ணைகளில் இருந்து கிடைக்கும் கழிவுகளை கொண்டு உரங்களை உற்பத்தி செய்தும் நம் நிலத்தில் இடலாம்.
- மண்புழுக்களை அதிகப்படுத்துவதன் மூலம் நிலத்தின் மண் வளத்தை அதிகப்படுத்த முடியும். அல்லது மண்புழு உரத்தை தயார் செய்தும் பயன்படுத்தலாம்