நாட்டுகோழி நோய்த்தடுப்பு மேலாண்மை

-நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி தாக்கும் பொதுவான நோய்கள்

 

1) இராணிகெட் நோய் (வெள்ளை கழிச்சல்)
2) அம்மை நோய்
3) கோழி காலரா
4) சளி நோய்
5) ரத்த கழிச்சல் மற்றும் மஞ்சள் – ஈரல் நோய்
6) தலை வீக்க நோய்
7) ஒட்டுண்ணி பாதிப்புக்கள்


நாட்டுகோழி தாக்கும் நோய்களில் வெள்ளை கழிச்சல் நோய் மிகவும் முக்கியமானது.இந்த நோய் கோழிகளை கோடை கால மற்றும் குளிர்கால பருவ மாற்றத்தின்போது அதிகமாக பாதிக்கும் இதை கொக்கு நோய் என்றும் கூறலாம். இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகளின் குடலும் நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும்.இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகள் தீவனம் எடுக்காது தண்ணீர் குடிக்காது வெள்ளையாகவும் பச்சையாகவும் கழியும் எச்சம் இடும் பொது ஒரு காலை தூக்கிகொல்லும் ஒரு இறக்கை மட்டும் செயல் இழந்து தொங்கும் தலையை முறுக்கி கொள்ளும் இறந்த கோழிகளை பரிசோதனை செய்து பார்த்தால் இரைப்பையில் ரத்த கசிவு இருக்கும். வெள்ளை கழிச்சல் நோய் வராமல் தடுக்க தடுப்பூசி அவசியம் போட வேண்டும்.


கோழி அம்மை நோய் இந்த நோய் பாதித்த கோழிகளில் முதலில் சிறு சிறு அம்மை கொப்புளங்கள் கண் கொண்டை நாசிபகுதி செவி மடல் போன்ற இடங்களில் காணபடுகிறது .பின்பு கொப்புளங்கள் ஏற்பட்ட இடங்களில் வடுக்கள் தென்படும். வாய் மற்றும் தொண்டை பகுதிகளில் புண்கள் ஏற்படுவதால் தீவனம் உற்கொள்ள முடியாமல் கோழி இறப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.இந்நோயை ஆறு வார வயதில் கோழி அம்மை தடுப்பு ஊசி போட்டு கட்டுபடுத்தலாம்.

7 வது நாள் முட்டைக் கோழிகள் ஆர் டி வி எப் 1 என்னும் இராணிகெட் நோய் தடுப்பு மருந்தினை கண்ணில் மற்றும் மூக்கில் 2 சொட்டுகள் கொடுக்க வேண்டும்


14 வது நாள் ஐ பி டி தடுப்பு மருந்தை கண் சொட்டு மருந்தாக கொடுக்க வேண்டும்


3- வது வாரம் லசோட்டா என்னும் இராணிகெட் நோய் நோய் தடுப்பு மருந்தினை கண் சொட்டு மருந்தாக உபயோகிக்க வேண்டும்


5- வது வாரம் மீண்டும் லசோட்டா மருந்தினை கொடுக்க வேண்டும் 6- வது வாரம் கோழி அம்மை தடுப்பூசி இறக்கையில் தோலுக்கு அடியில்(0.5 மில்லி) செலுத்த வேண்டும்


8- வது வாரம் ஆர் டி வி கே / ஆர் பி என்னும் நோய் இராணிகெட் நோய் தடுப்பூசியை இறக்கையில் தோலுக்கு அடியில் மில்லி செலுத்த வேண்டும்
18- வது வாரம் இராணிகெட் நோய் (ஆர் டி வி கே) நோய்க்கான தடுப்பூசியை மீண்டும் செலுத்த வேண்டும்


மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடி தண்ணிரில் லசோட்டா மருந்தினை கலந்து வைக்க வேண்டும். லசோட்டா கொடுப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் குடற்புழு நீக்கம் செய்தல் வேண்டும் .


குறிப்பு:
தீவனம் அல்லது தண்ணீரில் வைட்டமின் கலவை மருந்துடன் சிறிது சுன்னாம்புதூள் கலந்து கொடுப்பதன் மூலம், முட்டைகளின் எண்ணிக்கைகளை அதிகரிப்பதுடன், தோல் முட்டை இடுவதையும் தடுக்கலாம்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline