நாசமாக்கிய நாகரீகம் !!!!!!

 

BpD72mXCUAEv9KD

 

மண் வெட்டிய மண்வெட்டிகளும் இல்லை
உழுது உண்ட கலைப்பைகளும் இல்லை

வெட்டுமண் சுமந்த பின்னல் கூடைகளும் இல்லை
குடிநீர் சேகரித்த குளங்களும் இல்லை

கால்கிலோ தங்கத்தை கடுக்கானாய் சுமந்த காதுகளும் இல்லை
கோபுரங்கள் கண்ட சிற்பங்களும் இல்லை

விடியலில் ஒலிக்கும் பாகவதர் ராகங்களும் இல்லை
குளங்களில் குளித்த கோமனங்களும் இல்லை

வெத்திலை பாக்கு பரிசங்களும் இல்லை
நல்லது கெட்டதை சொல்ல பெரியோர்களும் இல்லை

தோழிலும் இடுப்பிலும் சுமந்த பருத்தி துண்டுகளும் இல்லை
நியாங்கள் சொன்ன பஞ்சாயத்து அரச ஆலமரங்களும் இல்லை

நல்லதையும் கெட்டதையும் கட்டிகாத்த வேட்டிகளும் சேலைகளும் இல்லை
ஆறுதலான அன்பை பகிர்ந்துகொள்ள ஆத்தாவும் ஐயாவும் இல்லை

பிள்ளைகளை இடுப்பில் சுமந்த அம்மாக்களும் இல்லை
தாய்பாலை தரமாய் கொடுத்த தாய்மையும் இல்லை

வெள்ளை எடுத்த உவர் மண்ணும் இல்லை
மங்கலங்கள் தந்த மஞ்சள் பையும் இல்லை

நெஞ்சம் குளிர பசியாற்றிய கஞ்சி கலையங்களும் இல்லை
மாராப்பு சேலை அணிந்த பாட்டிமார்களும் இல்லை

இனம் மதம் தாண்டி மாமன் மச்சான் என்று உறவு கொண்டாடிய உறவுகளும் இல்லை
ஒரு உப்பு சவுக்கார கட்டியை ஊரே தேய்த்து குளித்த ஊர்களும் இல்லை

தாவணிகள் தந்த தாரகைகளும் இல்லை

முக மஞ்சள் பூசிய மணி மகுடங்களும் இல்லை

மல்லிகைமணம் சுமந்த கூந்தல்களும் இல்லை
இடுப்பை சுற்றி சொருகிய சுருக்கு பண பைகளும் இல்லை

மாட புறாக்களும் இல்லை
குயில் பாடிய கானங்களும் இல்லை

ஏறி குளங்களில் மிதக்கும் எருமை மாடுகளும் இல்லை
புனை அடித்த யானைகளும் செக்கிழுத்த காளைகளும் இல்லை

கைகளை துண்டால் மறைத்து பேசிய சந்தை வியாபாரமும் இல்லை
தொலைபேசியின் நூறு அழைப்புகளில் நிறைவுபெறாத நெஞ்சம்

ஒரே கடிதாசியில் உள்ளம் குளிர்ந்த கடிதங்களும் இல்லை
திலகம் இட்ட நெற்றிகளும் இல்லை

தேகம் வளர்த்த ராகி திணை கம்புகளும் இல்லை
கோபுரங்கள் காட்டிய கோடி புண்ணியங்களும் இல்லை

கன்னகியாகிய பெண் சாபங்களும் இல்லை
முல்லைக்கு தேர் கொடுத்த அரசனும் இல்லை

நாலு ஊரு தாண்டி அதிகாலை ஒலிக்கும் வாங்கு சப்தமும் இல்லை
முந்தானை முடிச்சுகளும் இல்லை……

நமக்குள் முன்னேற்றம் என்ற பெயரில்

நம்மை நாசமாக்கிய நமது நாகரீகம் ….

Source: Facebook

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.