நல்லா தூக்கம் வரணுமா? இதெல்லாம் சாப்பிடுங்க

நல்லா தூக்கம் வரணுமா?

 

இரவில் தூக்கம் வர எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், தூங்கியதும் உடனே விடிந்தது போல் தோன்றும் .இன்றைய காலத்தில் அதிக வேலைப்பளுவின் காரணமாக டென்சன் மற்றும் மனஅழுத்தம் இருப்பதால், பெரும்பாலானோர் தூக்கமின்மையால் நிறையவே அவஸ்தைபடுகிறார்கள். இதனால் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, மனநலமும் பாதிக்கப்படுகிறது. இதற்காக அத்தகைய முயற்சியில் ஒன்றாக ஒரு சில உணவுகளை இரவில் படுக்கும் முன் உட்கொண்டாலும், தூக்கம் நன்கு வரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

நல்லா தூக்கம் வரணுமா

 

தூக்கம் வர  வாழைப்பழம் :

கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ள பழமான வாழைப்பழத்தை தினமும் உறங்கும் முன் சாப்பிட்டு தூங்கினால் நன்கு தூக்கம் வரும். மேலும் இதில் தூக்கமூட்டும் பொருளான செரோட்டீன் மற்றும் மெலடோனின் இருக்கிறது. உடலில் தசைகளில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும் மெக்னீசியம் இருக்கிறது. ஆகவே இத்தகைய சத்துக்கள் நிறைந்துள்ள வாழைப்பழத்தை மில்க் ஷேக் செய்து குடித்தால், நன்கு தூங்கலாம்.

இறைச்சி : இறைச்சிகளில் அதிகமான அளவு ட்ரிப்டோஃபேனுடன் அமினோ ஆசிட் இருப்பதால், தூக்கம் நன்கு வரும். சிலசமயங்களில் இறைச்சியை உண்டப்பின் தூக்கம் வருவது போல் இருக்கும், அதற்கு காரணம் இது தான். ஆகவே இந்த இறைச்சியை இரவில் சாப்பிட்டு தூங்கினால் நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.

சூடான பால் : நமது தாத்தா பாட்டி காலங்களில் இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் பாலை குடித்து விட்டு தூங்குவர். இவ்வாறு குடித்து தூங்கினால் நன்கு தூக்கம் வரும் என்று தற்போதைய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏனெனில் பாலில் தூக்கத்தை மூட்டும் பொருளான ட்ரிப்டோஃபேன் இருக்கிறது. ஆகவே இந்த சூடான பாலை குடிக்க உடலில் ஒருவித சோம்பேறித்தனம் ஏற்பட்டு, நன்கு தூக்கம் வரும்.

உருளைக்கிழங்கு : வாழைப்பழத்தை போன்றே உருளைக்கிழங்கிலும் கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும் ஒரு உணவுப் பொருள். இதை சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, உடல் குண்டாவதோடு, ஒரு சோம்பேறித்தனமும் உண்டாகும். ஒரு தட்டு வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கை இரவில் சாப்பிடலாம். சொல்லப்போனால், இது ஒரு சிறந்த இரவு நேர ஸ்நாக்ஸ்.

தூக்கம் வர  தயிர் :

உணவுப் பொருட்களில் நிறைய உணவுகள் தூக்கத்தை மட்டும் தூண்டாமல், உடல் எடையையும் அதிகரிக்கின்றன. அதில் தயிர் மிகவும் சிறந்த தூக்கமூட்டும் உணவுப்பொருள் மற்றும் உடல் எடையை கட்டுப்படுத்தும் உணவுப் பொருளும் கூட. பாலில் என்னென்ன சத்துக்கள் உள்ளதோ, அதே சத்துக்கள் தான் தயிரிலும் இருக்கிறது. ஒரு வித்தியாசம் மட்டும் பாலுக்கும், தயிருக்கும் இருக்கிறது. பாலில் கொழுப்புக்கள் அதிகம் உள்ளன. ஆனால் தயிரில் இல்லை. ஆகவே இதனை தினமும் இரவில் சாப்பிட்டு தூங்கலாம்.

ஓட்ஸ் : படுப்பதற்கு முன் சாப்பிட ஒரு சிறந்த உணவுப்பொருள் ஓட்ஸ். ஏனென்றால் இதில் கால்சியம் மற்றும் மக்னீசியம் அதிகமாக உள்ளது. இதில் இருக்கும் கால்சியம் உடலுக்கு தேவையான அளவு மட்டும் தூக்கத்தை தரும். மக்னீசியமோ தசைகளை ரிலாக்ஸ் செய்வதற்கான ஒரு சிறந்த நிவாரணி.

எனவே நல்ல நிம்மதியான தூக்கம் வேண்டுமென்பவர்கள், மேற்கூறிய உணவுகளை சாப்பிட்டு வந்தால் நிம்மதியாக தூங்குவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline