தொழில் மரியாதையும் சுய மரியாதையும்
செருப்புக் கடைக்கு ஒரு கஸ்டமர் சென்றார். கடையில் உள்ள பணியாளர் ( Customer support excutive )அவரை வரவேற்று அழைத்து, அவருக்கு செருப்பை எடுத்துக்காட்டினார்.. கஸ்டமரை அமர வைத்து அவர் காலடியில் அமர்ந்து ஒவ்வொரு செருப்பாக அணிவித்து காட்டினார்.
இது செருப்பு வாங்க வந்த கஸ்டமருக்கு சங்கடமாக இருந்தது. நானே போட்டு பார்க்கிறேன் என்றார் கஸ்டமர்.. ஆனாலும், பணியாளர் விடவில்லை.
பணியாளர் தொடர்ந்து அவருக்கு உதவினார். கஸ்டமர் பெருந்தன்மையாக சொன்னார் “அய்யா! நானும் மனிதன் நீங்களும் மனிதன். என் கால்களை நீங்கள் தொடுவது எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது”
பணியாளர் சிரித்தபடி சொன்னார்.
“இந்த கடைக்கு வெளியே போய் விட்டால், நீங்கள் நூறு கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் உங்கள் கால்களைத் தொடமாட்டேன். அது என்னுடைய சுய மரியாதை!
கடைக்குள் நீங்கள் நூறு கோடி கொடுத்தாலும், உங்களுக்கு உதவுவதை நான் நிறுத்த மாட்டேன். இது என்னுடைய தொழில் மரியாதை.