தெளிவான திட்டமிடல் – கலப்பு பண்ணையம்

நான் வடிவமைத்தஒருங்கினைந்த பண்னையம்:-)

விவசாயின் மகனாக பிறந்த நாம் பலரும் தற்போது விவசாயம் செய்வது இல்லை அதற்கு காரணம் பொருளாதார காரணங்களுக்காக வேறு ஏதாவது செய்கிறோம்.அதில் துளியும் தவறு இல்லை.வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு போக பணம் அவசியம் .அதை தேட திரை கடல் ஓடியும் திரவியம் சேர்க்க வேண்டும்.அதில் மாற்று கருத்து இல்லை.எணக்கு விவசாயத்தின் மீது அளவற்ற காதல் உன்டு எணக்கு இருக்கும் ஆர்வத்துக்கு வேறு தொழிலுக்கு போயிருக்க கூடாது ஆனால் வேறு தொழிலை தேர்ந்தெடுத்தேன் .நானாக விரும்பி பல்வேறு தொழிலில் கஷ்ட பட்டு உள்ளேன்.என் பள்ளி நாட்களில் நாட்களில் சுற்றி இருந்தவர்களால் கூறபட்டது எல்லாம் உனக்கென்னப்பா தோட்டம் காடு இருக்கு பொழச்சுக்குவே என்பதே.ஆனால்.அதெல்லாம் காதில் போட மாட்டேன்.

என் நோக்கம் எல்லாம் எங்க தோட்டத்தை அனைத்து கட்டுமான வசதிகளுடனும் மேம்படுத்துவதே.அதற்கு நிறைய பொருட்செலவு ஆகும்.அதை தற்போது இருக்கும் வசதியுடன் விவசாயத்தில் ஈடுபட்டால் சாத்தியம் ஆகாது என உணர்ந்து இருந்தேன்.அதனால் வெளியேரி பொருள் தேடினேன்.கரையேர பத்து வருடங்கள் ஆனது.அனுபவமும் முதுர்ச்சியும் பெற்றேன்.இதே நிலையில் தான் என் சகோதரரும் இருந்தார்.இப்போது நாங்கள் விவசாயத்தை மறந்துவிட வில்லை திரும்பி பார்கிறோம் அப்பா வழக்கம் போல் விவசாயம் பார்த்து கொன்டு இருந்தார் .சரி இனி தோட்டத்துக்கு செலவு செய்ய முடிவு செய்தோம்.அது செலவு அல்ல முதலீடு ……

முதலில் தோட்டத்தின் வரைபடம் துல்லியமாக தயாரித்தோம்(உதவி கூகுல் மேப் ).என்ண என்ண செய்ய வேண்டும் என தெளிவாக திட்டம் இட்டோம் .நிலத்தின் சரிவுகளையும் தன்மைகளையும் நன்கு அறிவேன்.அதற்கு ஏற்றாற்போல் குளம் அமையும் இடம் தேர்வு செய்தோம்.(அவ்விடத்தில் பாட்டனார் மடை அமைத்திருந்தார்) அடிப்படை தேவையான நீர் வளத்தை மேம்படுத்த நீர் தாரைகளை கண்டறிந்தோம்.J c b உதவியுடன் குளத்தில் இருந்து மண் எடுத்து நீர் தாரைகளில் தடுப்பு உருவாக்கி சுமார் 80 ஏக்கர் பரப்பில் (மற்றவர்களின் நிலமும் சேர்த்து) பொழியும் மழை நீர் முழுவதையும் குளத்துக்கு கொன்டு வந்தோம்.நீர்மட்டம் உயர்ந்தது .பக்கத்து தோட்டத்துக்காரர் அதன் பலனை அனுபவிக்குறாரே என வருத்தபடவில்லை மாறாக நீர்தாரை தடுப்புகளை அவர்களே பராமரித்து கொண்டனர்.மழை காலங்களில் களப்பனி அவர்களுடையது.

தண்ணீர் பஞ்சம் வந்த பின் போர் வண்டிக்கு செலவு செய்வதை விட இது பாதுகாப்பானது .குளம் அருகிலே போர் அமைத்தோம்….சரி நீராதாரத்தை மேம்படுத்தியாகிவிட்டது.வேறு என்ண செய்யலாம் கிணறுகளை சரி செய்தோம் .தென்ணை பயிரிட முடிவு செய்தோம் வழக்கமாக எல்லோரும் 25 அடிக்கு ஒன்று வீதம் ஏக்கருக்கு 70 மரம் போடுவர் .நாங்கள் 30 அடிக்கு ஒன்று வீதம் ஏக்கருக்கு 50 மட்டுமே போட்டோம் .ஏன் இப்படின்னு யாருக்கும் புரியவில்லை .காரணம் இருந்தது .30 அடி இடை வெளியில் சூரிய ஒளி குறைவில்லாமல் வரும்.

மரம் ஆரோக்கியமாகும் காய்ப்புதிறன் கூடும்.இடையில் கொழுக்கட்டை நண்றாக வளரும் .மற்றவர்கள் புல்லை அழிக்க களை கொல்லி காசு கொடுத்து வாங்கி அழிப்பர் ஆணால் நாங்கள் புல் வளர விரும்புகிறோம்.அதுக்கும் காரணம் உன்டு .அது தானே நாம் அமைக்க உள்ள ஆட்டு பண்ணைக்கு ஆதாரம்.எங்கள் நீராதாரத்துக்கு 2000 தெண்ணை போடலாம் 25அடியில் 28 ஏக்கர் போடுவதைவிட 30 அடியில் 40 ஏக்கர் போட முடிவெடுத்தோம்.சொட்டுநீர் பாசணத்தில்.எல்லாம் ஒன்றுதான்.பொதுவாக தோப்பு போட்டால் மேய்ச்சல் நிலம் பறிபோகும் ஆனால் எங்களுக்கு அப்படியே இருந்தது. இப்போது 40 ஏக்கரில் 2000 தென்னையுடன் கூடியமேய்ச்சல் நிலம் தயார் 10 ஏக்கரில் தரமான கொழுக்கட்டை புல்லுடன் தனி மேய்ச்சல் நிலமும் தயார் இப்போது என்ண செய்ய வேண்டும் ….

இனி மேல் செய்ய போவது தோட்டத்தின் முன்பகுதி மட்டும் கம்பி வேலி அமைக்கவேண்டும் மற்ற வேலிகள் பழய உயிர் வேலி உள்ளது அதை வெட்டி புதுப்பித்து அடைக்க வேன்டும்.இது முடிந்தால் 50 ஏக்கரும் பாதுகாக்க படும் .(உயிர் வேலியை பராமரிக்க புது ஐடியா கைவசம் உள்ளது) இனி என்ன செய்யலாம் .இங்கே தான் நம் உர தொழிற்சாலை வருகிறது .2000 தென்னை க்கு உரமிடவேண்டும்,உபரி வருமானம் வர வேன்டும்.களை பிரச்சனை இருக்க கூடாது எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு செம்மறி ஆடு 100 உருப்படி வாங்கி மேய்க்கறதுதான்.வளர்ப்பில் வரும் லாபம் பற்றி நாம் பேச வேண்டியது இல்லை அடிப்படை விவசாய அறிவு உள்ள அனைவருக்கும் அது தெரியும் அது தனி அது இப்போ வேன்டாம் …..

.இயற்கை உர மேலான்மைக்கு வருவோம் வேலியால் பாதுகாக்க பட்ட நிலத்தில் பாரம்பரிய முறைப்படி ஆடு மேய்க்கலாம்.(ஆடு வளர்ப்பு ,தீவன மேலான்மை பற்றி பிறகு தனியாக எழுதுகிறேன்) இந்த 100 செம்மறிஆடுகளில் இருந்து வரும் கழிவுகள் எளிதில் பணமாக மாறும் எப்படி?……

1 ஆட்டுக்கு 10 சதுர அடி வீதம்100*10=1000+200=1200சதுர அடியில் அலுமினியம் ஷீட் கொட்டகை அமைக்க வேண்டும் .அதற்கு முன் அந்த இடத்தை நமது குளத்தில் இருந்து மண் எடுத்து 4 அடி உயரத்துக்கு மேடாக்க வேண்டும் அதில் கொட்டகை அமைக்க வேண்டும் .கொட்டகை என்பது கோழி பண்ணை மாதிரிதான் .பன்ணையின் தளம் இருபக்கமும் சரிவாக இருக்கனும் அதன் முடிவில் கால்வாய் அமைத்து ஓரிடத்தில் இனைக்க வேண்டும் அடுத்து 4 அடி அகலம் 30 அடி நீளம் உள்ள தொட்டி அமைக்கனும் 1 அடி இடை வெளி விட்டு 4 அடி அகலம் 10 அடி நீளம் உள்ள தொட்டி அமைக்கனும் .இரன்டாவது தொட்டியில் ஆற்று மணல் நிறப்ப வேண்டும் தொட்டியின் முடிவில் 3இன்ஞ் pvc குழாய் வைத்து கிணறு வரை கொண்டு செல்ல வேண்டும் .கிணற்றுக்கு அருகில் செப்டிக் டேங் போன்ற தொட்டி ஒன்றை கட்ட வேண்டும் தொட்டிகள் கட்டும்போது ஒன்றை விட இரண்டாவது சற்று தாழ்வாக இருக்க வேண்டும்.

இரவு முழுவதும் பண்ணையில் இருக்கும் ஆடுகள் காலையில் மேய்ச்சலுக்கு திறந்து விட வேண்டும் பின்பு வாகனங்களை கழுவ சர்வீஸ் ஸ்டேஷனில் பயன் படுத்தும் கம்பரஷர் பம்ப்பை பயன் படுத்தி பண்ணையை சுத்தம் செய்யனும் கழிவு நீர்கள் கால் வாய் வழியாக வெளியேரி முதல் தொட்டியை அடையும் அங்கு அது நன்றாக நொதிக்கனும் அதற்கு வேளான்மை துறையில் கொடுக்கும் நுண்உயிரிகளை பயன் படுத்தலாம்(மாட்டு பண்ணைக்கும் இதுவே கூடுதல் தேவைக்கு நாமக்கல் பகுதியில் கிடைக்கும் கோழி எருவை பயன் படுத்தலாம்) நொதித்த கழிவுகள் மெதுவாக பயனித்து இரண்டாவது தொட்டியை அடையும் அங்கு மணல் மூலம் வடிகட்டி தெளிந்த சத்துக்கள் மிகுந்த யூரியா கனிமங்கள் செரிந்த நீர் மட்டும் pvc குழாய் வழியாக கிணற்றுக்கு அருகில் உள்ள தொட்டியை அடையும் .இவை அனைத்தும் தானாக நடக்க வேண்டும் அதற்கேற்றாற்போல் கட்டுமானம் இருக்க வேண்டும் நடை முறை சிக்கல் வந்து விட கூடாது அதற்கு ஒரு சிவில் இஞ்சினியரின் உதவியோ அல்லது அனுபவம் மிக்க மேஸ்த்திரியோ அவசியம்.

எல்லா தொட்டிகளையும் தென்னை மட்டை கொன்டு மூட வேண்டும்.வெயில் பட்டால் அனைத்தும் வீண் மிகுந்த முன் யோசனை அவசியம் தொட்டியில் திட கழிவு அதிகம் ஆனால் jcb மூலம் 6 மாதத்திற்கு ஒரு முறை அகற்றி வயலுக்கு போட்டு உழவு செய்யலாம் .அனைத்துக்கும் தீர்வு உண்டு………

.சரி இப்போ சத்து மிகுந்த நீர் கிணற்றுக்கு அருகில் உள்ள தொட்டிக்கு வந்துவிட்டது அதை எப்படி பயன்படுத்துவது …சொட்டுநீர் பாசனம் அமைப்பவர்கள் வெஞ்சுரியன் என்ற அமைப்பை ஏற்படுத்தி தருவார்கள் அதன் மூலம் எளிதாக பைப் லைனில் இதை கலக்க முடியும் .இதனால் என்ண நடக்கும் ….யூரியா வும் இதர எல்லா விதமான சத்துக்களும் இயற்கையாக தினசரி மென்மையான அளவு தென்ணை க்கும் மற்ற பயிர்களுக்கும் கிடைக்கும் சீரான வளர்ச்சி நோய் எதிர்ப்பு திறன் விஷம் இல்லா விளைச்சல்,வீன் செலவுஇல்லை,தன்நிறைவு,மற்றும்பல பயன்கள் …இறுதியில் காந்தியின் தன்நிறைவு அடைந்த இந்தியா…விமர்சனங்கள் வரவேற்கபடுகிறது

Sivancell Mahesh Gr

2 Comments

  1. இளஙகோ 10/10/2015
  2. Sakthi 28/07/2016

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline