டயட்-ல இந்த உணவுகளை கண்டிப்பா சேத்துக்கோங்க…

இன்றைய காலத்தில் உடல் எடை அதிகமாகிவிடக் கூடாது என்பதற்காக அனைவருமே டயட்டை மேற்கொள்கின்றனர். மேலும் டயட் மேற்கொண்டால், உடலில் எந்த ஒரு நோயும் எளிதில் வராமல் தடுக்கலாம். அவ்வாறு டயட் மேற்கொள்ளும் போது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உணவுகளில் வேறுபாடுகள் இருக்கும். ஏனெனில் பெண்கள் எப்போதும் வீட்டிலேயே இருப்பார்கள். அதனால் அவர்கள் எதையும் அநாவசியமாக

சாப்பிட மாட்டார்கள். அதுவே வேலைக்கு செல்லும் பெண்கள் என்றாலும் உணவில் ஓரளவு கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள்.

ஆனால் ஆண்கள் அவ்வாறு இல்லை. அவர்கள் நண்பர்களுடன் வெளியே பல இடங்களுக்கு செல்வார்கள். அப்போது நண்பர்களுடன் ஹோட்டலுக்கு சென்றால், அவர்கள் சாப்பிடுவதற்கு அளவே இல்லாமல் இருக்கும். இதனால் அவர்கள் உடலில் அளவுக்கு அதிகமாக கொலஸ்ட்ராலானது இருக்கும். கொலஸ்ட்ரால் உடலில் அதிகம் இருந்தால், விரைவில் இதய நோய், புற்றுநோய் போன்றவை வந்துவிடும். வேண்டுமென்றால் பாருங்கள், பெண்களை விட, ஆண்களுக்கு தான் விரைவில் இதய நோய் மற்றும் இதர நோய்கள் வரும்.

ஆகவே தான் டயட் மேற்கொள்ளும் ஆண்கள் தவறாமல் ஒருசில உணவுகளை தினமும் உடலில் சேர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் அந்த உணவுகள் என்னவென்றும் பட்டியலிட்டுள்ளனர். அது என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, அதை உணவில் சேர்த்து பயன் பெறுங்களேன்…

தக்காளி

தக்காளி ஒரு சிறந்த பழம். அதிலும் ஆண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் உள்ள லைக்கோபைன் என்னும் பொருள், உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும். ஆகவே இதனை தினமும் உண்ணும் உணவில் சேர்த்தால், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.

பிரேசில் நட்ஸ்

நெட்ஸ் என்றால் உடலுக்கு நல்லது என்பது தெரியும். அதிலும் பிரேசில் நட்ஸ் தான் ஆண்களுக்கு சிறந்தது. ஏனெனில் அதில் செலினியம் எனும் பொருள் அதிகம் உள்ளது. அதனால் ஸ்பெர்ம்களின் அளவு அதிகரிக்கும். மேலும் செலினியம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, உறவு கொள்ள ஆர்வத்தை தூண்டும் ஒரு சிறந்த உணவுப் பொருளும் கூட.

பச்சை காய்கறிகள்

டயட்டில் இருக்கும் ஆண்கள் முட்டைகோஸ், பிராக்கோலி மற்றும் முளைகட்டிய பயிர்களை உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த உணவுக் பொருட்களில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் கெமிக்கல் இருக்கிறது. அதிலும் புரோடெஸ்ட் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். ஆகவே தினமும் சிறிது இதனை உணவில் சேர்ப்பது நல்லது.

ப்ளூபெர்ரிஸ்

ப்ளூபெர்ரி பழங்கள் புரோடெஸ்ட் புற்றுநோயை தடுக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள். மேலும் ஆய்வுகள் பலவற்றில், இந்த பழத்தின் நன்மைக்கு அளவே இல்லை, இது இதய நோய், ஞாபக சக்தி குறைவு மற்றும் டைப்-2 நீரிழிவு போன்றவற்றை குறைக்கும் என்று கூறுகிறது. அதிலும் இந்த பழம் பெண்களை விட ஆண்களுக்கு தான் சிறந்தது என்றும் கூறுகிறது.

முட்டை

கூந்தல் உதிர்தல் அதிகமாக இருந்தால், கவலைபடாமல், முட்டையை மட்டும் தினமும் உணவில் சேர்த்து வந்தால் போதும். ஏனெனில் முட்டையில் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் புரோட்டீன் மற்றும் வைட்டமின் பி7 சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் முட்டையின் மஞ்சள் கருவில் அதிக அளவு இரும்புச்சத்து இருக்கிறது. ஆகவே இரத்த சோகை குறைந்து கூந்தல் உதிர்தல் நின்றுவிடும்.

மாதுளை

மாதுளையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், ஆண்கள் தினமும் உணவில் சேர்க்கும் போது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறைந்துவிடும். நிறைய ஆய்வுகளில் மாதுளை ஜூஸை தினமும் குடித்து வந்தால், புரோடெஸ்ட் புற்றுநோய் குறைந்துவிடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூண்டு

பூண்டின் நன்மைகளுக்கு அளவே இல்லை. ஏனெனில் இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இதயத்தில் ஏற்படும் அடைப்பை தடுக்கிறது. மேலும் இதன் மீது மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் பூண்டு மற்றும் வெங்காயத்தை சாப்பிட்டால், புரோடெஸ்ட் புற்றுநோய் தடைபடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதனை தினமும் உணவில் சேர்ப்பது நல்லது.

சாலமன்

கடல் உணவுகளில் அதிகமான அளவில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. அதிலும் சாலமன் என்னும் மீனில் அதிகம் உள்ளது. ஆண்கள் இந்த மீனை உணவில் சேர்த்தால், உடலில் ஏற்படும் நோய்கள் பலவற்றிற்கு ஒரு ஆயில்மெண்ட் போன்றது. மேலும் இதை சாப்பிட்டால், மனஅழுத்தம் குறைந்துவிடும்.

நவதானியங்கள்

நவதானியங்களில் சத்துக்கள் பாக்கெட் பாக்கெட்டாக உள்ளது. அதிலும் வைட்டமின், நார்ச்சத்து மற்றும் கனிமச்சத்து உள்ளன. இது ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் சிறந்த உணவுப்பொருள். ஆண்கள் இதனை உடலில் அதிகம் சேர்த்தால், இதில் உள்ள வைட்டமின் பி9 ஸ்பெர்ம்களை ஆரோக்கியமாக வைக்கும். கூந்தல் உதிர்தலும் நீங்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline