சூரிய குளியல் சன்பாத்
வெயில் காலம் வந்தால் பலரும் சூரியனை கண்டு அஞ்சி நடுங்குவார்கள். அழகு போய்விடும், தோல் கருத்து விடும், ஸ்கின் கான்சர் வந்துவிடும் என்ற மாத்ரீயான அச்சங்களுக்கு குறைவு இல்லை. இதை பயன்படுத்தி கம்பனிகள் சன்ஸ்க்ரீன் எல்லாம் விற்று லாபம் சம்பாதிப்பார்கள்.
சூரியன் அஞ்சவேண்டிய விஷயம் இல்லை. அது தான் ஆதிபகவன். உலகின் அனைத்து உயிரினங்களுக்கும் உணவளிக்கும் அன்னதாதா. தாவரங்கள் சூரிய ஒளி மூலமே போட்டோசிந்தசிஸ் செய்து வளர்கின்றன. மிருகங்கள் தாவரங்களையே உணவுக்கு நம்பியுள்ளன. ஆக சூரிய ஒளியே உயிரின் மூல ஆதாரம். சூரிய ஒளி நமக்கு அளிக்கும் நன்மைகள் அளவற்றவை.
சூரிய குளியல் பிரெஸ்ட் கான்சரை தடுக்கும்
அதில் உள்ள வைட்டமின் டி3 பல், எலும்பு, டயாப்டிஸ் முதலிய பல வியாதிகளுக்கு அருமருந்து
உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒயிட் பிளட் செல்லை சூரிய ஒளி அதிகரிக்கும்
ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரித்து தசைகளுக்கு உயிர்ப்பை வழங்கும்
பிளட்பிரஷர் இருப்பவர்கள் சூரிய குளியலால் பிரஷரை இறக்கிகொள்லலாம்.
படை, முகபரு, பங்கஸ், காயங்களை ஆற்றுதல் இவற்றை செய்யும் சக்தி படைத்தது சூரிய ஒளி. காயம்பட்ட இடங்களை சூரிய ஒளியில் காட்டினால் அதில் உள்ல பாக்டிரியாக்களை சூரிய வெப்பம் கொன்றுவிடும்.
டிபர்ஷன் எனும் மன அழுத்தத்தையும் போக்க வல்லது சூரிய குளீயல்
சன்பாத் எடுப்பது எப்படி?
வெயிலில் ஓடியாடி வேலை செய்பவர்களுக்கு சன்பாத் எனும் கான்செப்ட் அவசியம் இல்லை. நாள் முழுக்க ஆபிஸில் இருக்கும் நம்மை மாதிரி ஒயிட்காலர் ஆசாமிகள் வார விடுமுறையிலாவது சன்பாத் எடுப்பது நல்லது
விதிகள்:
உடலின் துணீமறைக்காத பகுதிகளில் நேரடி சூரிய வெளிச்சம் படவேண்டும். லோஷன், சன்ஸ்க்ரீன் எதுவும் கூடாது. ஜன்னல் கண்னாடி மூலம் வரும் வெளிச்சமும் செல்லாது. நேரடி சூரிய ஒளி உடலில் படவேண்டும்
குளிர் நாடுகளில் இருப்பவர்கள் (அட்லாண்டாவுக்கு வடக்கே), காலை 10- 2 வரை மார்ச் முதல் அக்டோபர் வரை தினம் 40 நிமிடம் சன்பாத் எடுக்கலாம்.
வெப்ப நாடுகளில் இருப்பவர்கள் வெயிலை பொறுத்து அதற்கு முன்/பின் சன்பாத் எடுக்கலாம். உச்சிவெயிலில் சன்பாத் எடுத்தால் தோல் எரிவது போல் தோன்றுவத்கு முன்பே சன்பாத்தை நிறுத்திவிடவும். தோல் எரிவது ஆவது கூடாது. அது தொடர்ந்தால் ஸ்கின் கான்சர் வரும். வெயிலை பொறுத்து அதற்கு முன்பே சன்பாத்தை நிறுத்திவிடவும்.
தலைக்கு தொப்பி, கண்ணுக்கு கண்னாடி அணியவேண்டும்.
ஆண்கள் சட்டை அணியாமல், ஆப் டிரவுசர்/பெர்முடா அணிந்து சன்பாத் எடுக்கலாம். வெயிலில் ஓடியாடி விளையாடலாம். தோட்ட வேலை செய்யலாம். பெண்கள் உடையை பொறுத்து வெயில் படும் பகுதி குறைவு என்பதால் அவர்கள் சற்று அதிக நேரம் வெயிலில் நிற்கவேண்டி வரும்.
சன்பாத் எடுத்த சமயம் போக மற்ற சமயங்களில் சூரிய வெளிச்சம் படாமல் நிழலில் இருக்கலம்.
நிறைய நீர் அருந்தி ஹைட்ரேட் செய்துகொள்வது அவசியம்.
இதனால் தோல் கறுக்கும். டேன் ஆகும். ஆனால் அது தற்காலிகமானதுதான். மற்றபடி பரிணாமவியலின்படி கருத்த தோல் தான் வெள்ளைதோலை விட ஆரோக்கியமானது. ஆனால் தற்கால “பேர் அன்ட் லவ்லி உலகம்” அதைபற்றி கவலைபடுவது இல்லையே?