சூரிய ஒளி விளக்குப் பொறி

Capture

தனது கண்டுபிடிப்பின் மூலம் விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த திரு பி. டேவிட் ராஜா பியூலா. இவர் நெல்லை மாவட்டம் கடையத்தில் தோட்டக்கலை உதவி இயக்குநராக பணியாற்றுகிறார்.
நெல்லை மாவட்டத்தின் பிரதான தொழில் விவசாயம்தான். அதுவும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் பகுதியான கடையம் போன்ற பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் மல்லிகை, கத்தரிக்காய் போன்ற பயிர்களை பயிரிடுவது வழக்கம்..ஆனால் அவர்களின் பிரச்சினை பயிர்களைத் தாக்கும் பூச்சிகள்..குறிப்பாக மல்லிகையை பாதிக்கும் வெள்ளை ஈக்கள் மற்றும் கத்தரியைத் தாக்கும் கத்தரி தாய் அந்து பூச்சி.. இந்த இரண்டையும் ஒழிக்கும் கருவி உண்மையில் அப்பகுதி விவசாயிகளுக்கு ஒரு வரம்தான். இதைத்தாண்டி இந்தக் கருவி ஒளி தரும் விளக்காகவும் பயன்படுகிறது. மேலும், கொசுக்களையும் ஒழிக்கிறது. இந்தப் புதிய கருவியினால் கடையம் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் பூச்சிக்கொல்லிக்காக பயன்படுத்திய செலவும் கணிசமாக குறைந்துள்ளதோடு பணி நேரமும் மிச்சமாகியுள்ளது. பொதுவாக இந்தப் பகுதி விவசாயிகள் 7 நாட்களுக்கு ஒரு முறை பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர். அந்தச் சமயத்தில் தான் டேவிட் தனது கண்டு பிடிப்பான ‘டேவிட்டின் சூரிய ஒளி விளக்குப் பொறி’யை விவசாயிகள் மத்தியில் அறிமுகப்படுத்தினார்.
முதலில் 1 ஏக்கர் நிலத்தில் இரண்டு கருவிகள் பொருத்தப்பட்டன. மேலும் அந்தப் பகுதியைச் சேர்ந்த 35 விவசாயிகளுக்கு இந்தக் கருவி கொடுக்கப்பட்டது. இந்தக் கருவி தொடக்கத்தில் 3 தாய் அந்துப் பூச்சிகளை பிடித்த நிலையில் படிப்படியாக 500 அந்துப் பூச்சிகளைப் பிடிக்கத் தொடங்கியது. இதனால் 7 நாட்களுக்கு ஒரு முறை பூச்சிக் கொல்லி மருந்து தெளித்த விவசாயிகள் அதை 15 நாட்களுக்கு ஒரு முறையாக மாற்றினர். இதனால் விவசாயிகளின் செலவும் பாதியாகக் குறைந்தது. ஒரு ஏக்கர் மல்லிகை தோட்டத்திற்கான பூச்சிக்கொல்லி மருந்து செலவு ரூபாய் 24,000 த்தில் இருந்து ரூ. 12,000 ஆகவும், ஒரு ஏக்கர் கத்தரித் தோட்டத்திற்கான செலவு ரூபாய் 10,000 ல் இருந்து ரூபாய் 5000 ம் ஆகவும் குறைந்துள்ளது. இந்த கருவியின் விலை ரூபாய் 8000 மட்டுமே. இரண்டு ‘டேவிட்டின் சூரிய ஒளி விளக்குப் பொறி’யை வாங்கும் கத்தரி விவசாயிகளுக்கு 3 மாதத்தில் ரூபாய் 5000 மிச்சமாகும். இதே போல் மல்லிகை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ரூபாய் 12,000 மிச்சமாகும். பொருளாதார லாபங்கள் மட்டுமின்றி இந்த கருவியைப் பயன்படுத்துவதால் பூச்சிக்கொல்லி மருந்து உபயோகத்தை கட்டுப்படுத்த முடியும். இது நமது சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும். இதைத்தாண்டி இந்த கருவியை நாம் வீடுகளிலும் பயன்படுத்த முடியும் என்பது மற்றொமொரு சிறப்பு.

வீடுகளில் இந்த கருவியை பயன்படுத்துவதன் மூலம் கொசுக்களை நாம் கட்டுப்படுத்த முடியும். இதனால் நமது ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்பதும் கூடுதல் மகிழ்ச்சிதான். இப்படி பல்வேறு வகைகளிலும் பயனளிக்கக் கூடிய இந்த கருவியை வாங்க விரும்புபவர்கள் கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

திரு பி டேவிட் ராஜா பியூலா உதவி இயக்குனர், தோட்டக்கலைத் துறை,
கடையம்,
திருநெல்வேலி மாவட்டம்,,
தமிழ்நாடு.
மின்னஞ்சல் microeconomicsdavid@yahoo.co.in
அலைபேசி – 9486285704

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.