சினை நிற்காமல் போன கால்நடைகள் சினை நிற்க இயற்கை மருத்துவம்

சினை நிற்காமல் போன கால்நடைகள் சினை நிற்க இயற்கை மருத்துவம்.

இன்னைக்கு இருக்குற அவசர உலகத்துல மாடு சினை நிக்கலைனா உடனே விற்க போயிடுறோம். அது என்ன பண்ணும் பாவம், எல்லாமே இரசாயனம் தெளிச்ச தீணி தான் போடுறோம், தீவணம் ன்னு வெளிய பெருக்கான் கழிவு மாறி எதையோ வாங்கி போடுறோம், அதெல்லாம் எதுல செய்யுறாங்க என்னென்னா கூட சேர்க்குறாங்க ன்னு நிஜமா நமக்கு தெரியுமா? பண்றதெல்லாம் தப்பு நாம தான், இதனால தான் மாட்டுக்கு தற்காலிக மலட்டுத்தன்மை வருது. இன்னைக்கு இருக்குற நிலைல தீணி பெரும் பாடு தான். இருந்தாலும் புதுசா கறவை மாடு வாங்குறதுக்கு கொஞ்ச காலம் தட்ட போட்டு மாட்டை இந்த சிகிச்சையை செஞ்சு அதோட தற்காலிக மலட்டு தன்மையை சரி செஞ்சுரலாம்.

 

சினை நிற்காமல் போன கால்நடைகள் சினை நிற்க இயற்கை மருத்துவம்

தேவையான பொருட்கள்:

1. வெள்ளை முள்ளங்கி.
2.. கற்றாளை துண்டு
3. முருங்கை இலை
4. பிரண்டை (தண்டு)
5. கறிவேப்பிலை
6. மஞ்சள் கிழங்கு

சிகிச்சை அளிக்க வேண்டிய நெறிமுறைகள்:

சினை நிற்கவில்லை என்று உறுதியாக தெரிந்ததும், அன்றிலிருந்தோ அல்லது அடுத்த நாள் முதலோ சிகிச்சையை துவங்க வேண்டும்.

1. முதல் ஐந்து நாட்களுக்கு தினமும் ஒரு வேலை முழு வெள்ளை முள்ளங்கியை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும்.
(நாள் 1 -5)

2. அடுத்த ஆறாவது நாள் முதல் நான்கு நாட்களுக்கு அதவாது ஒன்பதாவது நாள் வரை, கற்றாழையை முட்களை சீவிவிட்டு, தினமும் ஒரு வேலை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 6 -9)

3. அடுத்த நான்கு நாட்களுக்கு பத்தாவது நாள் முதல் பதிமூன்றாவது நாள் வரை , நான்கு கை அளவு அப்போது பறித்த முருங்கை இலையை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 10 -13)

4. அடுத்த நான்கு நாட்களுக்கு நான்கு கை அளவு அப்போது பறித்த பிரண்டையை ( தண்டு மட்டும்) வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 14 -17)

5. இறுதியாக அடுத்த நான்கு நாட்களுக்கு நான்கு கை அளவு அப்போது பறித்த கறிவேப்பிலை உடன் மஞ்சள் ஒரு ஓரிரு கிழங்கு (பெரியாத இருப்பின் ஒன்று, சிறியது எனில் இரண்டு, கடையில்வாங்கிய பொடியை எக்காரணம் கொண்டும் உபயோகிக்க வேண்டாம்) வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 18 -21).

மேற்சொன்ன அனைத்தையும் ஒரு நாளைக்கு ஒரு வேலை மட்டுமே கொடுக்க வேண்டும், நேரடியாக உண்ண கொடுக்க வேண்டும். கட்டாயம் மாடு சினை நிற்கும், இல்லை எனில் மேலும் ஒரு முறை இதை ஓரிரு நாட்கள் இடைவெளிக்கு பிறகு தொடரவும். கட்டாயம் மலடு நீங்கி சினை நிற்கும்.

பேராசிரியர் திரு.புண்ணியமூர்த்தி

4 Comments

  1. hindhusthaan 10/10/2019
  2. Kamar 18/12/2020
  3. Arul 21/04/2021
  4. iswarya 17/09/2021

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline