சாப்பிட்டதும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நல்லது. புகையிலை சேர்த்துப் போடுவதும் சுண்ணாம்பைக் கண்ட இடங்களில் தடவுவதும் துப்புவதும் செய்து இதை அருவெறுப்பாக்கிவிட்டனர்.
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு அளவாகச் சேர்த்து கால் மணி நேரம் நன்றாக மென்று உமிழ்நீருடன் விழுங்க வேண்டும் ; துப்பக் கூடாது. பின்னர் நல்ல தண்ணீரில் வாயை நன்றாகக் கொப்புளித்துவிட வேண்டும். அப்போதுதான் பற்களில் காறை படியாது.
வெற்றிலை சளி போக்கும்; செரிமானம் தரும். சுண்ணாம்பு கால்சியம் சத்து தரும்; கொழுப்பு உணவுகளைச் செரிக்கச் செய்யும், எலும்பும் வலிமை பெறும், பல்லும் தூய்மையாகும். பாக்கு மெல்லுவதால் இரத்தம் அதிகரிக்கும்; கொழுப்பு கரைக்கப் படுவதால் இரத்தம் தடிமானாகாது, அதனால் இரத்த அழுத்தம் இதய அடைப்பு வருவதில்லை.