குளிர்நீர் குளியல்:
சிறந்த இயற்கையான குடும்பகட்டுபாட்டு முறை எது? வென்னீர் குளியல் தான். டெஸ்டிக்கிள்ஸ் சூடானால் துரதிர்ஷ்டவசமாக அதில் உள்ள ஸ்பெர்ம்கள் சூடு தாங்காமல் இறந்து விடுகின்றன. ஸ்பெர்ம் கவுண்டு குறைந்து விடுகிறது. வாரம் 3 நாள் தினம் 30 நிமிடம் வெந்நீரில் குளித்தால் சில மாதங்களில் ஆண்கள் இயற்கையாக மலடு ஆகிவிடுவார்கள்.
இது குறித்து பர்மிங்கஹாம் பெண்கள் மருத்துவமனையில் நடத்தபட்ட ஆய்வு ஒன்றில் சோதனை எலிகள் இரு பிரிவுகளாக பிரிக்கபட்டன. ஒரு க்ரூப் எலிகள் சூடான நீரில் 1 மாதம் குளித்தன. இன்னொரு பிரிவு எலிகள் குளிர்நீரில் 1 மாதம் குளித்தன. வெந்நீரில் குளித்த எலிகளுக்கு உறுப்பு சிறுத்தல், ஸ்பெர்ம் எண்ணிக்கை குறைதல், எலிக்குட்டிகள் பிறப்பு ஆகிய மூன்றும் கணிசமாக நிகழ்ந்தன. ஆனால் அவற்றை குளிர்நீர் குளியலுக்கு உட்படுத்தியதும் 10 வாரங்களில் அவை நார்மல் நிலைக்கு திரும்பின.
ட்ரை ஸ்கின் வர காரணமும் வெந்நீர் குளியல் தான். நீரில் உள்ள வெப்பம் நம் தோலில் உள்ள இயற்கையான ஈரபதத்தை அகற்றிவிடுகிறது. கூட சோப்பு, ஷாம்பு என கெமிக்கல் அட்டாக் வேறு இதை மோசமாக்குகிறது. பலரும் செய்யும் இன்னொரு தவ்று குளித்து முடித்தபின் வேக வேகமாக உடலை துண்டால் துவட்டுவார்கள். உண்மையான குளீயல் முறை குளிர்நீரில் குளித்து துண்டால் ஈரத்தை லேசாக ஒற்றி எடுப்பதுதான். அப்போது குளிர்நீரை உறிஞ்சி மேலும் ஈரபதம் தோலில் நிரம்ப அது உதவும்.
உலகில் நாகரிக மனிதனை தவிர்த்து அனைத்து பிராணிகளும் குளிர்நீரில் தான் குளிக்கின்றன என்பது உபரி தகவல்.