கம்போஸ்ட் உரம் தயாரிப்பது

1)பச்சையம் நிறைந்த பில் கழிவுகள் தழை சத்தினை கழிவுகுவியலுக்கு (கம்போஸ்ட் குவியல் என்றாலும் கழிவு குவியலும் என்றாலும் ஒரே பொருள் இக்கட்டுரையில்)ஊட்டும் எப்பொழுதும் பில் கழிவுகள் உடன் தவிட்டு நிறம் கொண்ட கரிம சத்து நிறைந்த பொருட்களும் சேர்க்கவும் . சரி விகிதத்தில் உள்ள குவியலே உடனே சிதைந்து ஊட்டம் நிறைந்த கம்போஸ்ட் உரமாய் மாறிடும்.
பச்சையம் நிறைந்த கழிவுகளே இருப்பின் மெதுவாய் அளவில் சுருங்கி, சிதைந்திடுகையில் நாற்றம் வீசிட தொடங்கும்.
2) கொழுப்பு நிறைந்த பொருட்கள்,செல்ல பிராணிகளின் கழிவுகள் மற்றும் இதர பிராணிகளின் கழிவுகள் சேர்ப்பதை தவிர்க்கவும். இவை குவியலில் பூச்சி தொல்லைகளும் மற்றும நோய்களையும் உருவாக்கும் .
3) வெள்ளை தாள் ,செய்தி தாள், மற்றும் கணினியில் உபயோகபடுத்தும் தாள் அனைத்தும் நன்றாய் சிறு துண்டுகளாக்கி குவியலில் பயன் படுத்தலாம்
4) நன் மக்கிய கம்போஸ்ட் உரம் முகர்ந்தும் மற்றும் தொட்டு பார்கையில் மனம் நிறைந்த மண் வாசனையோடு இருக்கவேண்டும். குவியலில் சேர்க்கப்பட்ட எந்த பொருளின் மணமும் தெரிய கூடாது
5) மண்புழுக்கள் அரைபட்ட காபி கொட்டைகளை மிகவும் விரும்பும் .
6) சாம்பல் சேர்ப்பதாய் இருப்பின் மிதமான அளவில் சேர்க்கவும் அவை காரத்தன்மை மிகுந்தவை. அவை pH மதிப்பு (அதாவது ஒரு பொருளின் பொருளின் அமில கார தன்மையின் விஞ்ஞான குறியீடே pH ஆகும்.)குறியீட்டை மாற்றிடும் .அமிலத்தன்மை நிறைந்த இலை வகையினை சேர்க்கவும் .
7) களைக்கொல்லிகள் மற்றும் தொடுகளைகொல்லிகள் தெளிப்பிற்கு உட்பட்ட தழை மற்றும் செடி வகைகளை கழிகுவியலில் சேர்ப்பதை தவிர்க்கவும். களைகளையும் ஒட்டவெட்டபட்ட புல்வெளி கழிகளையும் தவிர்க்கவும்
8) குவியலின் சிதைவிற்குண்டான நுண்ணுயிரிகள் சரிவர இயங்க அல்லது செயலாற்ற சமசீரான அளவில் தழைசத்தும் மற்றும் கரிம சத்தும் நிறைந்த கலவையான பொருட்கள் தேவை.
தழைசத்து பச்சை பொருட்களான வெட்டப்பட்ட பில்,இயற்க்கை உரம் மற்றும் உணவு கழிவுகளில் இருந்தும் ,கரிம சத்து தவிட்டு நிறமான பொருட்கள் அதாவது காய்ந்த இலை சறகுகள் , வைக்கோல் ,கிழிக்கப்பட்ட காகித குப்பை ,மர இழைப்பு கழிவில் இருந்தும் கிடைக்கின்றது எப்பொழுதும் தழைசத்தும் கரிம சத்தும் சரிவிகிதத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த விகிதமானது எடையில் இருத்தல் வேண்டும் . கொள்ளவில் கணக்கிடுதலை தவிர்க்கவும் .
9) பாசி மற்றும் கடல் பாசி இனங்கள் குவியலில் சேர்ப்பது நல்லது. சேர்க்கும் முன்னர் அவற்றின் உப்புதன்மையை நீரில் கழுவி அகற்றிடல் வேண்டும்
10) கழிவு குவியல் முற்றிலும் மக்கிய நிலையில் அடர்த்தியகாவும் ,கொள்ளளவில் பாதியே இருக்கும் .

11)குளிர் காலங்களில் கம்போஸ்ட் குவியல் கருப்பு நிற கலன்களில் நேரிடையான சூரிய ஒளியில் இருக்குமாறு வைக்கவும் .வைக்கோல் கொண்டு குளிர் தன்மையை குறைத்திட முடியும். .இந்த குறிப்பு பனி பிரதேசங்களில் அல்லது பனி அதிகமாய் பொழியும் இடங்களுக்கு பொருந்தும்
12) மர தடுப்புகள் தானியம் மற்றைய உணவு மூட்டைகளை வைக்க உபயோகப்படும் . வீணாகிப்போன இத்தடுப்புகள் கொண்டும் நாம் கழிவு குவியலை மக்க வைக்க உபயோக படுத்தமுடியும் . சில மரசட்ட தடுப்புக்கள் கொண்டு ஒரு சின்ன அடக்கமான பெட்டி போன்று ஒன்றினை உருவாக்கி அதனில் கழிவுகளால் நிறைத்து மக்கு உரம்தனை தயாரிக்கலாம் .
13) வைக்கோல் கரிம சாது நிரம்பியது இது உரகுழி /கம்போஸ்ட் குவியலுக்கு ஏற்றது .ஆனால் களை விதைகள் இருக்க நேரிடும்.ஆகவே இதனை உபயோகிக்கையில் கவனமாய் சிதைவு ஏற்படுகின்றதா என கண்காணிக்கவும் .
14) 120 முதல் 160 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் கழிவு பொருட்கள் கம்போஸ்ட் உரமாக உருமாறுகின்றது . குறைந்த வெப்ப சூழலில் சிதைந்து மக்குவதற்கு காலம் அதிகமாகின்றது .
15) மக்குஉரம் செய்வதற்கு கழிவு பொருட்களை சேகரம் செய்து மூன்றடிக்கு மூன்றடிக்கு மூன்றடி என்னும் விகிதத்தில் (உயரம் x அகலம் x நீளம் ) குவியல்களை நிர்மாணிக்க வேண்டும் இந்தளவு குவியலே சிறந்தது . ஏனெனில் வெப்பம் தன்னுள் இருத்தியும் காற்றோடத்திற்கு வழி வகுக்கும்
16) குவியல் துரிதமாய் மக்கிட நேரடியான சூரிய வெப்பத்தில் இருக்கும் வகையில் இடம்தனை தேர்வு செய்யவும் .
17) குளிர் மற்றும் மழை காலங்களில் கழிவுகளை வீட்டின்னுள் வைத்து மக்க வைக்க இயலும்
18) கழிவுகுவியல் எப்பொழுதும் அதிக ஈரம் இல்லாமல் சரியான ஈர பதத்தில் இருக்கும்மாறு பார்த்து கொள்ளவேண்டும் . நன்கு நீரில் நனைத்த ஸ்பாஞ்சு பிழிந்த பின்னர் எந்தளவிற்கு ஈரம் தக்க வைத்திருக்குமோ அந்த ஈரபத அளவே குவியளிலும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும் குவியலின் மேற்பாகமும் .சுற்றுவெளிபுரமும் மிதமான ஈரதன்மையோடு இருக்கவேண்டும் . குறிப்பாக வேனிற் காலத்தில் இந்த ஈர தன்மையினை சரிவர பராமரித்தல் மிக அவசியம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline