பண்டைய இந்தியாவின் மிகச் சிறந்த கணித, வானியல் அறிஞர் ஆரியபட்டா. பூமியின் விட்டத்தை 99.8 சதவீதம் துல்லியமாகக் கணக்கிட்டவர். பூஜ்ஜியத்தை அடிப்படையாகக் கொண்டு கணித மதிப்புகளை இவர் பயன்படுத்தியுள்ளார். பை-க்கு (π) இன்று சொல்லப்படும் மதிப்புக்கு நெருக்கமான மதிப்பை அந்தக் காலத்திலேயே சொன்னவர்.
சூரிய கிரகணம், சந்திர கிரகணம், தன் சுற்றுப்பாதையில் பூமி சுற்றுதல், ஒளியை நிலவு பிரதிபலிக்கும் தன்மை உள்ளிட்டவை பற்றி விளக்கி எழுதியுள்ளார். 23 வயதிலேயே ‘ஆரியபட்டியா’ என்ற நூலையும், பின்னர் ‘ஆரியச் சித்தாந்தா’ என்ற நூலையும் எழுதியவர்.