எண்ணையிலே வகைகள் என்ன?

 

குறைவெப்ப அழுத்தம் – இதிலே எண்ணையை மெதுவாக பிழிஞ்சு எடுப்பார்கள். கைவினை தொழில் ஆகவும் வீட்டிலேயும் செய்யலாம். மிகவும் மெதுவான முறை.

அதிவெப்ப அழுத்தம் – இதிலே விதைகள் மிக அதிக அழுத்தத்திற்கு உட்படுத்தப்படும். அதனால் வெப்பமும் அதிகமாக இருக்கும்.

இந்த இரண்டிலும் வரும் எண்ணைய்களை வடிகட்டியோ அல்லது வடிகட்டாமலோ தரலாம். வடிக்கடுவது நாம துணியிலே வடிக்கட்டுவது போல்.

அதிவெப்பத்திலே எண்ணையிலே இருக்கும் சத்துக்கள் ஆவியாகலாம். அதைத்தவிர மேற்கண்ட இரு முறைகளிலேயும் எந்த பிரச்சினையும் இல்லே.

சுத்திகரிக்கப்பட்ட (ரீபைன்) எண்ணெய் – இதிலே எண்ணையிலே இருக்கும் நிறம், வாசம், உப்புக்கள், இன்னபிறவற்றை நீக்க பலவேதிப்பொருட்களை சேர்த்து பல முறை வடிக்கட்டுவார்கள். நீராவி அனுப்பியும் வடிகட்டுவார்கள். இதை எந்த முறை எண்ணையுக்கும் செய்யலாம். இது எண்ணைய் வெகுகாலம் கெட்டுப்போகாமல் இருக்கவும் வாசம் போன்றவை அடிக்காமல் இருக்கவும் செய்யப்படுகிறது.

கரைப்பான் மூலம் எடுக்கப்படும் எண்ணைய் (சால்வட் எக்ஸ்ராக்ஸ்சன்) – இதிலே எண்ணையை பிழிவதே வேதிப்பொருட்கள் மூலம் பிழிவார்கள். அதாவது விதைகளை ஏதேனும் ஒரு கரைப்பானில் கரைத்து பின்னர் அந்த கரைப்பான் திரவத்திலே இருந்து எண்ணையை பிரித்தெடுப்பார்கள். இதிலே எண்ணைய் கிடைக்கும் அளவு மிகவும் அதிகமாக இருக்கும்.

இதைத்தவிர மினரல் எண்ணைய் என சொல்லப்படும் பெட்ரோலிய பொருட்களிலே வரும் எண்ணைகளையும் கலந்துவிடுவது உண்டு. அது முழுக்க முழுக்க கலப்படமே.

நண்பர் ஒருவர் பதிவிட்டிருந்த ரோட்டரி பிரஸ் அதிவெப்பமா இல்லை குறை வெப்பமா என தெரியவில்லை.

எது இருந்தாலும் வேதிப்பொருட்கள் சேர்க்காமல், சூடு படுத்துவது, வேறு வகையான முறைகளிலே எண்ணையை மாற்றுவது என இல்லாமல்

செக்கிலே ஆட்டி அந்த எண்ணையை அப்படியே விற்றால் நல்லது. அப்படியே பயன்படுத்தலாம். ஆனால் அப்படி வரும் எண்ணையை 15-30 நாள் வைத்திருந்தாலே பெரிய விஷயம் சீக்கிரம் கெட்டுவிடும் வாய்ப்பு உள்ளது. தேங்காயை உடைத்து எவ்வளவு நாள் வைத்திருக்கமுடியும்???

இல்லையேல் வெறுமனே துணியில் வடிகட்டிய எண்ணைய் வாங்கலாம்.

மற்றபடிக்கு ரீபைண்ட், மற்றும் மற்ற முறையிலே மாற்றப்பட்ட எண்ணைய்களை வாங்குவது என்பது உடலுக்கு கேடு.

இது ஹைஜ்ரனேடட் என்படும் வன்ஸ்பதி, டால்டா போன்றவற்றிக்கும் பொருந்தும். அவைகள் டிரான்ஸ் பேட்டையே பாதி கொண்டவை.

நன்றி : முகபுத்தக  பகிர்வாளர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline